(246
||-.
அப்பாத்துரையம் - 36
கடமையே.
செய்தாலும் தீராத கடன், நம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு நாம் செய்ய வேண்டிய இவ்வகையில் இரண்டாங் கூறு செலவிடப்படுகிறது.
மூன்றாவது கூற்றை, நான் ஆற்றில் எறிந்து விடுகிறேன். நம் இன்பங்களுக்காக நாம் செலவுசெய்யும் பணம் ஆற்றில் பணம்போல நம் கையை விட்டு வீணாகப் போய்விடுகிறது. இது ஆற்றில் எறிவது போலத்தான்.
நான்காவது கூறு, என் எதிரிக்குச் செல்கிறது. நம் நெஞ்சிலுள்ள மறை மெய்ம்மைகளை வாங்கி அவற்றை அடக்கிக் கொள்ள முடியாமல் தூற்றும் பெண்களே நம் எதிரிகளாவர். அவர்கள் வீணான இன்பக் பகட்டுவாழ்வு நாடுபவர்கள்.
நம்மையும் இன்பம் நாடவைத்துப் பின் துன்பத்துக்கு ஆளாக்குபவர்கள். அவர்கள் இன்பப் பகட்டுகளுக்காகச் செலவுசெய்யும் பணந்தான் நம் எதிரிகளுக்கு நாம் கொடுக்கும் பணம் ஆகும்.
அரசன் விறகுவெட்டியின் கூர் அறிவை வியந்து பாராட்டினான். ஆனால், அவன் விளக்கங்களில் முதல் மூன்றைமட்டுமே அவன் ஒத்துக் கொண்டான். பெண்களைப் பற்றிய கடைசி விளக்கம் தவறானது என்று கருதினான்.
"அரசே, செயலறிவுமூலம் இதன் உண்மையை நீங்களே உணரலாம்,” என்றான் விறகுவெட்டி.
அரசன் சிறிதுநேரம் சிந்தித்தான். பின் விறகு வெட்டியைக் கூட்டிக் கொண்டு அவன் மனைவியும் தன் ஊழியரும் நின்ற இடத்துக்கு வந்தான். யாவரும் அறிய விறகுவெட்டியிடம், “இந்த நான்கு புதிர்களின் விளக்கத்தையும் வேறு யாரிடமும் கூறாதே. கூறினால், உன் தலையை வாங்கிவிடுவேன்,” என்று எச்சரித்துச் சென்றான்.
அரசன் அரண்மனைக்குச் சென்றதும் விறகுவெட்டி சொன்ன நான்கு புதிர்களையும் பெரிய தாள் அட்டைகளில் எழுதுவித்தான்.நாட்டின் பல பகுதிகளிலும் அவை பொதுமக்கள்
ணும்படி வைக்கப்பட்டன. இப்புதிர்களுக்கு விளக்கம் தருகிறவர்களுக்கு அவர்கள் தலையளவு பெரிய தங்கப் பிழம்பைப்