பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(248

66

அப்பாத்துரையம் - 36

'என் கட்ட ளையை மீறிப் புதிர்களின் விளக்கங்களை உன் மனைவியிடம் ஏன் தெரிவித்தாய்?” என்று அவன் கேட்டான்.

“என் மனைவியிடம் கொண்ட பாசத்தால் அறிவிழந்து தவறாகக் கூறிவிட்டேன், மன்னிக்கவேண்டும்," என்றான் குடியானவன்.

‘மனைவியின் பாசத்தால் என்னை மீறினாய். மனைவியின் பாசத்துக்காகவே உயிர் இழக்கக்கடவாய்!” என்றான் மன்னன்.

காவலர் விறகுவெட்டியை நெக்கித் தள்ளிக் கொண்டு போயினர். போகும் சமயம் அவன் அரசனைப் பார்த்து, "நான் தவறு செய்தது உண்மை அரசே! அதற்காகத் தண்டனையும் பெறுகிறேன்.

ஆனால், என் நான்காவது புதிர் உண்மை என்பதை என் தண்டனை மெய்ப்பிக்கிறது. இன்பப் பகட்டு விரும்பும் பெண்ணை நம்பித்தான் நான் கூறினேன். நீங்கள் கருதியபடி அவள் என் எதிரியல்லவானால், என் மறை செய்தியை உங்களிடம் வெளியிட்டிருக்கமாட்டாள். என் தலையைவிட தலையளவு பொன் உயர்வுடையதென்று கருதியிருக்கவும் மாட்டாள்,” என்றான்.

அரசன் விறகு வெட்டியின் ஆழ்ந்த உலகியல் அறிவை மதித்து அவனை விடுவித்துப் பரிசுகள் பல கொடுத்து அனுப்பினான்.