(250) ||_ _
அப்பாத்துரையம் - 36
விதைகளையும் அவள் பாதுகாப்பாக எடுத்துத் தோட்டத்தில் விதைத்தாள். தாயின் வீட்டிலேயே இருந்தாள்.
அன்புகொண்ட அந்த
தாயினிடம் நங்கையைப் பட்டினியாகக் கிடக்க எவரும் விரும்பவில்லை. ஆகவே, அவள் சமையற் பானையை மக்கள் இரவலாகப் பெற்றுச் சமைத்து, பானையைச் சிறிது சோறுடன் கொடுத்து வந்தனர். இது செய்தியறிந்த அண்ணன் அந்தப் பானையைத் திருடி எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவள் வகையறியாது திண்டாடினாள்.
அச்சமயம் பூகணி விதைகளின் நினைவு அவளுக்கு வந்தது. தோட்டத்தில் சென்று பார்த்தாள்; பூசணி செழித்துக் காய்த்திருந்தது. அவள் பூசிணியை விற்று அந்த வருவாயுடன் காலங்கழித்தாள். அவள் பூசணி மிகவும் சுவையுடையதா யிருந்ததால், அவளுக்குத் தட்டாமல் வருவாய் பெருகிற்று.
அண்ணன் மனைவிக்கு இந்தச் செய்தி எட்டிற்று. அவள் கொஞ்சம் கூலம் கொட்டிக்கொடுத்து பூகணிக் காய் பெற்றுவரும்படி வேலைக்காரியை அனுப்பினாள்.“விற்பனைக்குப் பூசணி இப்போது இல்லை,” என்று தங்கை முதலில் கூறினாள்.
பின், வந்தது அண்ணன் வீட்டு வேலைக்காரி என்று அறிந்து கூலத்தை பெற்றுக் கொள்ளாமலே தன் கடைசிப் பூசணிக்காயை அனுப்பினாள். மறுநாள் தங்கையை நாடி அண்ணனே போய்ப் பூசணிக்காய் கேட்டான்.
தங்கை: பூசணிக்காய் எல்லாம் ஆய்விட்டது. னி காய்த்துத்தான் ஆகவேண்டும்.
அண்ணன்: அது காய்க்காமல் வெட்டிவிடுவேன்.
தங்கை: என் வலது கையை முதலில் வெட்டு, அப்புறம் கொடியை வெட்டலாம்.
அவன் அப்படியே தங்கையின் வலது கையை ஈவிரக்கமின்றி வெட்டி விட்டு, பூசணிக் கொடியையும் அழித்தான். ஆதரவற்ற தன் தங்கையை வீட்டிலும் இருக்கவொட்டாமல் அவன் அடித்துத் துரத்தினான். அப்பாவிப் பெண் நோவு பொறுக்கமாட்டாமல் அழுதாள்.பின் மருந்து வைத்துக் கைக்குக் கட்டுக்கட்டிக்கொண்டு ஊர்ஊராக அலைந்தாள். ஒருநாள் காட்டுவழியாக அவள்