சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
251
போய்க் கொண்டிருந்தாள். களைப்பால் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள்.
வேட்டையாட வந்த அரசன் மகன், அவளைக் கண்டு “நீ யார்?" என்று உசாவினான். அவள் தன் துயரத்தை மட்டும் கூறினாள். விவரங்களைக் கூறவில்லை. ஆனால், இளவரசன் அவளிடம் மாறா அன்பு கொண்டான்.அவன் அவளைத் தன் தாய் தந்தையரிடம் இட்டுச் சென்று, மணந்தால் அவளையே மணக்க ரும்புவதாக வன்மையாகச் சொன்னான்.
அரசனும் அரசியும் தன் மகனுக்கு ஒரு கை முடமான பெண்ணை மணஞ் செய்துவைக்க விரும்பவில்லை. ஆயினும் மகன் பிடிவாதத்துக்கு அவர்கள் இணங்க வேண்டியதாயிற்று. இளவரசியாய்விட்ட நங்கைக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அரசனும் அரசியும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்கள்.
இச்சமயம் அண்ணன் தற்செயலாக அந்த நாட்டுக்கு வந்தான். அந்நாட்டரசன் மகன் கையிழந்த ஒரு நங்கையை மணஞ்செய்ததாக அவன் கேள்விப்பட்டதே, அவன் பொறாமை உள்ளம் மீண்டும் புதைந்தது. கையை வெட்டிய பின்னும் தங்கை நல்வாழ்வு வாழ்வது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவன், "அப்படியா செய்தி? அந்தப் பெண் இதுவரை எத்தனையோ பேரை மணந்து கொன்றுவிட்டாளே! உங்கள் இளவரசர் இன்னும் எத்தனை நாள் இருக்கப்போகிறாரோ, தெரிய வில்லை!" என்று கவலை தோய்ந்த முகமுடையவன்போல நடித்துப் பேசினான். அவன் சொற்கள் எங்கும் பரந்தன.
இளவரசன் இச்சமயம் நாட்டுப்புறங்களைச் சுற்றி வரச் சென்றிருந்தான். அரசன் இளவரசிபற்றிய அம்பலுரையை, நம்பி அவளையும் குழந்தையையும் துரத்தி விட்டான்.
ளவரசியாயிருந்த நங்கை மீண்டும் நாடோடியாய் அலைந்தாள். இப்போது அவளுக்குத் தன்னைக் காக்கும் பொறுப்போடு, தன் குழந்தையைப் பார்க்கும் பொறுப்பும் ஏற்பட்டிருந்தது. காட்டில் பழங்கள் கிடைத்தபோது அவள் அவற்றைப் பொறுக்கி ஒரு கூடையில் வைத்துக் கொள்வாள். நீர் கிடைத்த இடம் பழமும் நீரும் உண்டு வழிநடந்து அலைந்தாள்.