பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(252

அப்பாத்துரையம் - 36

ஒருநாள் குழந்தையுடனும் கூடையுடனும் அவள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தாள். இப்போது ஒரு பாம்பு வேகமாக அவளை நோக்கி வந்தது. அது தன்னைக் கடித்துக் கொன்றுவிடுவது உறுதி என்றே அவள் நினைத்தாள். ஆனால், பாம்பு அவளைக் கடிக்கவில்லை. அது மனித மொழியில் பேசிற்று. "நான் பேரிடரில் சிக்கியிருக்கிறேன். எனக்கு உன் கூடையில் சிறிது இடங்கொடு," என்றது. அவள் கூடையைத் திறந்து பாம்புக்கு அடைக்கலமளித்தாள்.

சற்று நேரத்தில் இன்னும் ஒரு பெரிய பாம்பு விரைந்து வந்தது. அதுவும் அவளைக் கடிக்கவில்லை. ஆனால், அது முதலில் வந்த பாம்பை எக்காரணத்தாலோ தேடிவந்ததாகத் தோற்றிற்று. “இவ்வழியாக ஒரு பாம்பு போயிற்றா" என்று அது கேட்டது.

நங்கை பொய்கூறவும் விரும்பவில்லை. காட்டிக் கொடுக்கவும் விரும்பவில்லை. "ஆம். அது இவ்வழியாகக் கொஞ்சநேரத்துக்கு முன்தான் போயிற்று,” என்றாள். பாம்பு மீண்டும் வேகமாகப் போய்விட்டது.

இரண்டாவது பாம்பு சென்ற சிறிது நேரத்துக்குள் முதல் பாம்பு கூடைக்குள்ளிருந்து, “இடர் நீங்கி விட்டது. இப்போது என்னை வெளியே விட்டுவிடு,” என்றது.

66

எனக்குத் தங்கிடம் எதுவுமே கிடையாது. சும்மா அலைந்து திரிகிறேன்,” என்றாள் அவள்.

66

அப்படியானால் என்னுடன் வா," என்று இட்டுச் சென்றது பாம்பு. போன வழியில் ஓர் ஏரி தென்பட்டது. பாம்பு நங்கையிடம், “வெயில் வெப்பு நீங்க, இதில் குழந்தையையும் நீராட்டி, நீயும் நீராடு," என்றது. நங்கை முதலில் தான் நீராடினாள். அப்போது குழந்தை நீரில் விழுந்துவிட்டது. அவள் அழுதாள். பாம்பு அழுகுரல் கேட்டு, “என்ன செய்தி?” என்றது.

நங்கை: ஐயோ! என் குழந்தை நீரில் விழுந்துவிட்டது காணவில்லை.

பாம்பு: கையைவிட்டு நீரில் துழாவு; அகப்படும். அவள் துழாவினாள். காணவில்லை.