பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

253

பாம்பு: இரண்டு கையையும் விட்டுத் தேடு.

நங்கை: எனக்கு ஒரு கை முடமாயிற்றே!

பாம்பு: நான் சொல்வதை அப்படியே செய்.

அவள் முடமான கையையும் விட்டாள். குழந்தை கையுடன் வந்தது. ஆனால், வியக்கத்தக்க முறையில் முடமான கை முழுக்கையாக வெளிவந்தது. நங்கை மகிழ்ந்து பாம்புக்கு நன்றி தெரிவித்தாள். "இப்போதே நன்றி தொவித்துவிடாதே. நான் உனக்கு முழு நன்மையும் செய்யும் மட்டும்,” என்றது பாம்பு.

"பாம்பின் தாய் தந்தையருடன் நங்கை குழந்தையோடு வாழ்ந்து வந்தாள்.”

தன்

நங்கையின் கணவனான இளவரசன் திரும்பி வருவதற்குள் அரசனும் அரசியும் நங்கை இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பினார்கள். அவள் கல்லறையாக ஒரு கல்லறையும் செப்பனிட்டு வைக்கப்பட்டிருந்தது. அவள் குழந்தையும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் அருகில் ஒரு கல்லறை சமைக்கப்பட்டிருந்தது.

மனைவியும் குழந்தையும் இறந்ததுகேட்டு இளவரசன் புழுவாய்த் துடித்தான். கல்லறைகளைச் சென்று பார்த்து அதனருகே அடிக்கடி சுற்றிப் புலம்பினான்.

நங்கையைப்பற்றி அவதூறு கூறிய அவள் அண்ணன் இப்போது அரசியிலில் ஓர் உயர்பணி பெற்றுப் பகட்டாக வாழ்ந்தான். அவன் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தங்கை ஒழிந்துவிட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு அமைதி தந்தது.

நங்கை எப்படியும் தான் போய்த் தன் கணவனைக் காணவேண்டுமென்று துடித்தாள். பாம்பு, "அப்படியானால் என் தாய் தந்தையர்களிடம் விடைபெற்றுக் கொண்டு போ. அவர்கள் ஏதாவது பரிசளிப்பதாயிருந்தால், வேறு எதையும் வாங்காமல், என் தந்தை கையிலுள்ள கணையாழியை மட்டும் கேள்,” என்றது.

பாம்பின் தாய்தந்தையரிடம் விடைகேட்டபோது, அவர்கள் முதலில் பிரிய மனம் இல்லாது வருந்தினர். பின்