பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 36

(254) || அளவற்ற செல்வக் குவைகளைப் பரிசாகக் கொடுத்தார்கள். அவள், "இவற்றை நான் எப்படிச் சுமந்து செல்வேன். இவை வேண்டாம்,” என்றாள்.

“பின் உனக்கு என்ன வேண்டும்?” என்று தந்தைப் பாம்பு கேட்டது. அவள் கணையாழியைக் கேட்டாள்.

தந்தைப் பாம்பின் முகம் சிறிது கறுத்தது. "இதைக் கேட்க உன்னிடம் யார் சொன்னார்கள்? என் மகன் தானே!" என்றது. அவள், “இல்லை, நானாகத்தான் கேட்கிறேன்," என்றாள்.

தந்தைப் பாம்பு கணையாழியை அவளிடம் கொடுத்தது. “உனக்கு உணவோ, உடையோ பணியாட்கள் நிரம்பிய வீடோ எது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இதனிடம் கேள். கிடைக்கும்,” என்று கூறிற்று.

நங்கை கணவன் வாழ்ந்த நகரத்தின் எல்லையில் கணையாழியின் உதவியால் ஒரு பெரிய வீடு தருவித்து அமர்ந்தாள். தானாகக் கணவனிடம் செல்ல அவள் துணியவில்லை. ஆனால், அப்புதிய வீட்டினையும் அதன் செல்வத்தையும் பற்றிய செய்தி இளவரசனுக்கு எட்டிற்று. அவன் தன் தாய் தந்தையர், பணியாளாயிருந்த நங்கையின் அண்ணன், மற்றும் பல ஊழியர்களுடன் சென்று அதைப் பார்வையிட்டான்.

நங்கை அவர்களை வரவேற்று விருந்தளித்தாள். விருந்தின் போது அவளைப்பற்றி இளவரசன் கேட்ட கேள்விக்கு விடையாக அவள் மெள்ள மெள்ளத் தன் கதை முழுவதும் கூறினாள். கதை முடிக்கும்வரை அண்ணன் ஐயுறாதபடி பொதுமொழியில் கூறி, இறுதியிலேயே விவரம் தெரிவித்தாள்.

இளவரசனுக்கு அவள் தன் மனைவி என்பது விளங்கிற்று. வயதுவந்த இளைஞனாகிவிட்ட மகனையும் நங்கை அவன் முன் நிறுத்தினாள்.இளவரசன் அவளை வரவேற்று அவளுடன் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்தான். அண்ணனை இளவரசன் தூக்கி லிடவே விரும்பினான். ஆனால், நங்கையின் இடையீட்டினால், அவன் சிறிது செல்வத்துடன் சல்வத்துடன் தொலைநாடு சென்று பிழைக்கும்படி நாடுகடத்தப்பட்டான்.