32. கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்
அர்மீனிய நாட்டுக் கதை
இடிந்து சோர்ந்த ஒரு பண்ணைக் குடும்பத்தில் இரண்டு உடன் பிறந்தார்கள் இருந்தனர். சீர்கெட்ட அந்தப் பண்ணையைத் திருத்த அவர்களிடம் பணம் இல்லை. குடும்ப செல்வமாகிய அதை விற்றுவிடவும் அவர்களுக்கு மனமில்லை. ஆகவே, இருவரில் ஒருவர் வெளியே சென்று உழைத்துப் பணம் ஈட்டி அனுப்புவதென்றும், மற்றவன் பண்ணைக் காரியங்களை மேற்பார்ப்பதென்றும் அவர்கள் தீர்மானித்தனர். மூத்தவன் தானே வெளியே சென்று பணம் ஈட்டுவதாகச் சொன்னான். இளையவன் வீட்டிலேயே இருந்து பண்ணையைப் பார்ப்பதாக ஒப்புக் கொண்டான்.
மூத்தவன் அடுத்த மாவட்டத்திலுள்ள ஒரு செல்வனிடம் போய் வேலை கேட்டான். அச்செல்வன் ஒரு கொடாக்கண்டன். சூழ்ச்சிப் பொறிகளிலும், சொற்பொறிகளிலும் தன் கீழ் வேலைக்கு வருபவர்களை மாட்டி ஆதாயம் பெற நாடுபவன்.
"நீ ஒரு ஆண்டு முழுவதும் - அடுத்த ஆண்டு குயில் கூவும் காலம் வரை - வேலை பார்ப்பதாக உத்தரவாதம் தரவேண்டும். அத்துடன் அந்த ஒரு ஆண்டுக் காலத்துக்குள் இருவருள் யார் சினங்கொண்டு பேச நேருகிறதோ, அவர் ஆயிரம் வெள்ளி தண்டமாகத் தரவேண்டும்,” என்றான்.
66
“என்னிடத்தில் பணம் இல்லையே!" என்றான் மூத்தவன். ‘அதனாலென்ன? ஆயிரம் வெள்ளிக்கு மாறாக இன்னும் பத்து ஆண்டு வேலை செய்ய ஒத்துக் கொள்ளலாம்,” என்றான்.
மூத்தவன் முதலில் தயங்கினான். பின் என்ன வந்தாலும் தான் கோபப்படாமல் அவனைக் கோபமூட்டி அவனிட