சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
257
மிருந்தே ஆயிரம் வெள்ளி பெறுவது என்று எண்ணித் துணிந்தான்.
காலையில் செல்வன் பணியாளை எழுப்பி வேலைக்கு அனுப்பினான். "போ, வெளிச்சமிருக்குமட்டும் வேலை செய்துவிட்டு வா,” என்றான்.
பணியாள் காலையிலிருந்து
வேலை
செய்தான். பொழுதுசாய வீடு திரும்பினான். “ஏன், இப்பொழுதே திரும்பி வந்துவிட்டாய்?" என்றான் செல்வன். "பொழுது சாய்ந்து விட்டதே. அதன்பின்தானே திரும்பியிக்கிறேன்," என்றான் பணியாள்.
"நீ பொழுது சாயும்போது வருவதாகச் சொல்லிப் போகவில்லையே. வெளிச்சம் இருக்கும்வரை வேலை செய்கிறேன் என்றல்லவா போனாய்?”
“பொழுது சாய்ந்தபின் வெளிச்சம் ஏது?”
"ஏன், நிலா இருக்கிறதே! அது வெளிச்சம் தராமல் இருட்டா ா தருகிறது?” பணியாளுக்கு கடுஞ்சினம் மூண்டெழுந்தது. “பகல் முழுவதும் வேலைசெய்தபின் எனக்கு ஓய்வே வேண்டாமா?" என்று கேட்டான்.
"ஓகோ, சினங்கொண்டு விடுகிறாயா?" என்றான் செல்வன். பணியாள் தன் நாக்கைத் தானே கடிந்து கொண்டான். “நான் சினங் கொள்ளவில்லை. சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் செல்கிறேன்” என்றான்.
அப்படியே சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் சென்று நிலவில் வேலை செய்தான். அன்று முழுநிலா நாள் ஆனாதால் இரவு முழுதும் வேலை செய்ய வேண்டி வந்தது.
ஆனால், அதற்குள் விடிந்தது. செல்வன் வந்தான். “காலை ஆகி விட்டது. வீட்டுக்குப் போவதானால் போய் உடனே திரும்பிவந்து வேலை செய்,” என்றான்.
பணியாளுக்கு இருபத்துநான்கு மணிநேர வேலையால் உடலெல்லாம் நொந்துபோய்விட்டது. குடியானவன் சூது கண்டு அவன் கனன்றெழுந்தான். அவன் மீது தன்கையிலிருந்த அரிவாளை வீசி.