பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

அப்பாத்துரையம் 36

"நீயும் உன் வேலையும் உன் பண்ணையும் நாசமாய் போக!"

என்றான்.

மறுகணவே அவனுக்குத் தன் பிழை தெரிந்தது.

செல்வன், “நீ இப்போது கடுஞ்சீற்றம் காட்டிவிட்டாய். எடு ஆயிரம் வெள்ளியை அல்லது பத்தாண்டு வேலை செய்வதாக உறுதிமொழி எழுதிக் கொடு,” என்றான்.

பணியாளன் இருதலைப் பொறியில் பட்டான். வெள்ளி கொடுக்க அவனிடம் பணம் இல்லை. ஆனால், இம்மாதிரி பத்தாண்டென்ன, பத்துநாள் வேலை செய்ய ஒத்துக்கொள்வது

கூடப் பைத்தியக்காரத்தனம்.

அவன் நீண்டநேரம் ஆராய்ந்தான். இறுதியில் ஆயிரம் வெள்ளிக்கு ஒரு பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு கையில் காசு எதுவுமில்லாமலே வீடு திரும்பினான்.

தம்பியிடம் நடந்தவை யாவும் கூறித் தன் அவப்பேறுக்கு அவன் வருந்தினான்.

தம்பி அண்ணனைத் தேற்றினான். “நான் அதே செல்வனிடம் சென்று அவனுக்குப் பாடம் படிப்பித்து வருகிறேன்," என்று கூறிவிட்டுச் சென்றான்.

செல்வன் மூத்தவனிடம் செய்துகொண்ட அதே கட்டுப்பாட்டையே இளையவனிடமும் செய்து கொண்டான். ஆனால், தம்பி அவ்வுடன்பாட்டின் பணத்தையும் கால எல்லையையும் இரட்டிப்பாக்கினான்.

இருவரில் யார் சினமடைந்தாலும் இரண்டாயிரம் வெள்ளி கொடுக்க வேண்டும். இரண்டாயிர வெள்ளி கொடுக்க முடியாதவர் இருபதாண்டு வேலை செய்ய வேண்டும்.

செல்வன் இதை மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டான். காலையில் செல்வன் பண்ணையாளை எழுப்பினான்

"பொழுதுவிடிந்து நேரமாயிற்று. விரைவில் உச்சி வேளையாய்விடும். நீ இன்னும் தூங்குகிறாய்?” என்றான்.

“ஏதோ சினங்கொள்கிறாய் போலிருக்கிறது” என்றான் வேலையாள்.செல்வன் தணிந்தான்.