பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

259

“நேரமாய்விட்டது என்றுதான் சொன்னேன்,” என்றான்.

சரி, போ. எனக்குத் தெரியும்" என்று கூறிய வண்ணம் பணியாள் மேலும் தூங்கினான். செல்வனுக்கு எதுவும் கூற அச்சமாய்விட்டது. ஏனென்றால் புதிய பணியாள் நடத்தை தன்னைக் கோபமூட்டுவதாக இருந்தது. கடைசியில் அவன் எழுந்திருந்துபோகக் கிட்டத்தட்ட உச்சி வேளையாயிற்று.

“விரைந்து செல், அப்பா. இன்னுமா தாளமிடுகிறாய்?" என்றான் செல்வன். "சினமா இது சீற்றமா?"

செல்வன் மீன்டும் பணிந்தான். “நேரமாயிற்றே என்று கூறினேன். அவ்வளவுதான்,” என்றான்.

“சரி, சரி நம் உடன்படிக்கையை மீறாமல் விழிப்பாயிரு,' என்று பணியாள் எச்சரித்தான்.

வேலை தொடங்கிப் பத்துக்கணம் ஆவதற்குள் மற்ற வேலையாட்கள் உச்சியுணவு உட்கொள்ளத் தொடங்கினார்கள். பணியாள் செல்வனை நோக்கி, "இப்போது யார் வேலை செய்வார்கள். இது உணவு நேரம்; எல்லாரும் உண்ணும்போது நாமும் உண்ணுவோம்" என்றான். இருவரும் உண்டனர்.

66

உண்டபின் நீங்கள் சிறிது உறங்குவது உண்டல்லவா?" என்றான் பணியாள். “ஆம்” என்றான் செல்வன்.

“அதுதான் சரி. வேலைசெய்யும் நாட்களில் கட்டாயம் உண்டபின் சிறிது உறங்கவேண்டும். அதிலும் வேலை செய்யாத நீங்கள் உறங்கும் போது, வேலைசெய்யும் நான் உறங்குவது இன்னும் அவசியம்," என்றான்.

செல்வனுக்கு அன்று உறங்கவே முடியவில்லை. ஆனால், பணியாள் பொழுதுசாய ஒரு மணிவரை தூங்கினான். அவனை எழுப்பச் செல்வன் துணியவில்லை. எழுந்தவுடன் அவன் அடக்கிவைத்திருக்கும் உணர்ச்சி அத்தனையும், அவனால் கொட்டாமலிருக்க முடியவில்லை. “எல்லாரும் தத்தம் வயலில் கதிர் அறுத்தாய்விட்டது. நம் வயலில் மட்டும் அரிவாள் கதிரில் படவே இல்லை. இம்மாதிரி வேலையை நான் ஒப்புகொள்ள முடியாது, என்றான்.

""

இளையவன்: கோபமல்லவா இது?