260
அப்பாத்துரையம் - 36
செல்வன்: இல்லை, இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போகலாம் என்றுதான் சொன்னேன்.
இளையவன்: அப்படியா, அது சரி.
அன்றிரவு செல்வன் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான். செல்வன் பணியாளை அழைத்து விருந்துக்கு ஒரு ஆடு வெட்டும்படி கூறினான். எந்த ஆட்டை வெட்டுவது என்று பணியாள் மிகப் பணிவாகக் கேட்டான். ஏதோ வந்த ஆட்டைக் கொல்லேன் என்றான்.
மேய்ச்சலிலிருந்து ஆடுகள் வந்து கொண்டிருந்தன. பணியாள் வழியில் உட்கார்ந்து கொண்டான். வந்த ஆட்டை ஒவ்வொன்றாக வரவர வெட்டி வெட்டி வீழ்த்தினான்.
செல்வனிடம் சிலர் வந்து, "உன் பணியாளுக்கென்ன பைத்தியமா? எல்லா ஆடுகளையும் வெட்டுகிறானே!" என்றார்கள். செல்வன் போவதற்குள் அவன் ஆடுகள் பெரும்பாலும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் வெட்டியாயிற்று.
செல்வன்: என்ன செய்கிறாய், முட்டாளே! எத்தனை ஆடுகளை வீணாக வெட்டிவிட்டாய்!
ளையவன்: வந்த ஆட்டை வெட்டு என்றுதான் சொன்னீர்கள். எல்லாம்தான் வந்தன. அஃதிருக்கட்டும், நீங்கள் சீற்றம் கொண்டிருக்கிறீர்களா, என்ன?
நெஞ்சிலிருந்து எழுந்த நெருப்பை அடக்கிக் கொண்டு, "அஃதெல்லாமில்லை; ஆடுகள் வீணாகப் டுகள் வீணாகப் போயினவே என்றுதான் வருந்துகிறேன்,” என்றான் செல்வன்.
66
அவ்வளவுதானா? சரி! சீற்றம் வராதவரை என்னால் வேலைசெய்யத் தடையில்லை,” என்றான் பணியாள்.
ஒருசில மாதங்கள் சென்றன; பணியாளைக் குறை சொல்லவும் முடியாமல், சொல்லாமலிருக்கவும் முடியாமல், செல்வன் திண்டாடினான். அவனுக்கு ஊரில் இருந்த மதிப்புப் போயிற்று; பெரும் பொருளழிவு ஏற்பட்டது; நெஞ்சில் ஓயாத கவலையும் தொல்லையும் உண்டாயின.