சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
261
எப்படியாவது பணியாளை விட்டொழித்தால் போதும் என்று அவன் நினைத்தான். ஆனால், தலைவன் சீற்றமடைந்து தானாக அவனை அனுப்பினால் இரண்டாயிர வெள்ளி கொடுக்கவேண்டும். அவனாகப் போக வேண்டுமானால் ஒப்பந்தப்படி குயில் கூவும் காலம் வரவேண்டும். இப்போது குளிர்காலமாதலால் இன்னும் மூன்றுமாத காலம் காத்திருக்கவேண்டும். இவற்றையெல்லாம் எண்ணி அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
அவன் தன் மனைவியை ஊர் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் விடியற்காலம் காத்திருக்கும்படி செய்தான். பணியாளுடன் தான் வரும்போது குயில்போல அவள் கூவவேண்டும் என்று ஏற்பாடு செய்தான். பணியாளை அவன் வேட்டைக்குச் செல்வோமென்று அவ்வழி அழைத்து வந்தான்; மனைவி குயில் போலக் கூவினாள்.
66
‘ஆகா, குயில் கூவுகிறது பார். உன் வேலைக்காலம் முடிந்துவிட்டது,” என்றான் செல்வன்.
பணியாள் இந்தச் சூழ்ச்சியின் தன்மையை உடனே உய்த்துணர்ந்து கொண்டான்.
குளிர்காலத்தில் கூவும் இந்தக் குயில் நல்ல சாதிக் குயிலாயிருக்க வேண்டும். இதை நான் கண்டெடுத்துக்கொண்டே போவேன் என்று துப்பாக்கியை நீட்டிக் குறி வைத்தான்.
செல்வனுக்குக் கிலி ஏற்பட்டது. “அட பாவி! அது குயிலல்ல; என் மனைவி; நீ செய்த அட்டூழியம் ஒன்றல்ல; பல. என் மனைவியையும் கொன்றுவிடாதேடா! இப்போதே போய் ஒழி,” என்றான்.
“நீ சீற்றப்பட்டு விட்டாயல்லவா?” என்றான் பணியாளன்.
சீற்றமில்லையென்றால் பணியாள் ஒழியமாட்டான். 'சீற்றம் என்று சொன்னால் இரண்டாயிரம் வெள்ளி கொடுக்கவேண்டும். ஆனால், இரண்டாயிரம் வெள்ளி போனால்கூடக் கேடில்லை. இந்தப் பணியாள் நம்மை விட்டுத் தொலைந்தால் போதும்' என்று செல்வனுக்குத் தோன்றிற்று.