பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(264) ||

அப்பாத்துரையம் - 36

கெஞ்சிக் கேட்டும் பயனில்லை. மூத்த மகன்மேல் அவளுக்குக் கோபம் வந்தது. “என் பிள்ளைக்கு இடமில்லாத வீட்டில் எனக்கென்ன வேலை?” என்று அவளும் ளைய மகனுடன்

புறப்பட்டாள்.

தாய் போனதற்கும் அண்ணன் அவ்வளவாகக் கவலைப்பட வில்லை. "செலவு இன்னும் குறைவுதான்,” என்று ஆறுதல் கொண்டான்.தாயும் மகனும் மெள்ள மெள்ள நடந்து சென்றனர். வழியில் காயும் கிழங்கும் உண்டனர். குளம் குட்டைகளில் கையால் நீர் மொண்டு குடித்தனர். சிலநாள் கழித்து அவர்கள் ஒரு சிறிய நகருக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார்கள்.

நகரிலிருந்து கொஞ்சந் தொலைவில் ஒரு குன்று இருந்தது. அதன் சரிவும் முழுவதும் காடும் புதரும் நிறைந்திருந்தது. அதன் அடிவாரத்தில் ஆளில்லாத ஒரு வீட்டை அவர்கள் கண்டார்கள்.

முதலில் அவர்கள் ஒன்றிரண்டு நாள் அதில் தங்கினார்கள்; வீட்டுக்கு யாரும் வரவில்லை. யாரும் அதில் வாழவில்லை என்று தெரிந்தபின் அவர்கள் அதிலேயே நிலையாகத் தங்கினார்கள்.

இளையமகன் காலையில் எழுந்து வெளியே சென்றான். எப்பாடு பட்டாவது வயது சென்ற அன்னையைக் காப்பற்ற வேண்டும் என்று அவன் துணிந்தான்.

அவன் முதலில் ஒரு கோடரி வாங்கினான். பகல் முழுதும் அவன் நல்ல விறகாகப் பார்த்து வெட்டினான். அருகிலிருந்த நகரத்தில் மாலையில் அதைக் கொண்டு போய் விற்றான். விறகில் கிடைத்த பணம் தாய்க்கும் அவனுக்கும் தாராளமாகப் போதுமானதாயிருந்தது.

66

“அம்மா! நான் திறமையில்லாதவன் என்பதற்காக நீங்களும் அண்ணனைப் போல் கவலைப்பட வேண்டாம், இதோ நான் ஒருவழி கண்டு பிடித்து விட்டேன். இந்த வரும்படியைக்கொண்டு நீங்களும் நானும் நன்றாக வாழலாம்,” என்றான் அவன். தாய் அவனைக் கட்டியணைத்துக் கொண்டு, "நான் எனக்காகக் கவலைப் படவில்லை. குழந்தாய்! உனக்காகத்தான் கவலைப் பட்டேன். இனிக் கவலையில்லை,” என்றாள்.

அடுத்தநாள் அவன் இன்னும் நல்ல விறகு தேடிக்குன்றில் ஏறினான்; அங்கே ஒரு புறமாகப் பாரிய அரிமாவின் உருவம்