பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(266) ||

அப்பாத்துரையம் 36

மறுநாள் அவன் மரம் வெட்டப்போகவில்லை. மாலையில் அரிமாவின்முன் விளக்கேற்றிவைத்துத் தொட்டியையும் அதன்முன் வைத்து வணங்கி நின்றான். அரிமா வாய் திறந்தது.

66

அன்பனே! தொட்டியை என் வாய்க்கு நேர் எதிராக வைத்துவிட்டு நில். என் வாயிலிருந்து அதில் பொன் காசுகள் விழும். தொட்டி கிட்டத்தட்ட நிரம்பியதும், நீ போதும் என்று கூறிவிடவேண்டும். ஏனென்றால், ஒரு காசு கீழே விழுந்தால்கூடப் பெரிய தீமைகள் ஏற்படும்,” என்றது அரிமா.

இளைஞன் அது கூறியபடியே செய்தான். அரிமாவின் கண்களில் பொன்நிலவொளி வீசிற்று; அதன் வாய் திறந்தது; வாயிலிருந்து சரசர அருவி போல் பொன்காசுகள் சொரிந்தன; தொட்டியில் அவை கணகணவென்று ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தன; விரைவில் தொட்டி நிறையலாயிற்று. வியப்பாலும் மகிழ்ச்சியாலும் இளைஞன் சிறிது நேரம் உணர்வற்று நின்றான். ஆனால், அரிமாவின் எச்சரிக்கை அவனைத் தட்டி எழுப்பிற்று. தொட்டி கிட்டத்தட்ட நிறைந்ததும் அவன், “போதும்” என்றான். அருவி நின்றது. அரிமாவின் வாயும் மூடிற்று. அவன் மீண்டும் அரிமாவுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.

அது முதல் அவன் வறுமை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இளைஞன் வீடு இருந்த இடத்தில் இப்போது ஒரு இடமகன்ற பண்ணை இருந்தது. ஆட்டுக் கொட்டில், மாட்டுக் கொட்டில், கோழிக் கூண்டுகள், புறாக் கூண்டுகள் அதில் நிரம்பியிருந்தன. வேலையாட்கள் பலர் இருந்தனர். ளைஞனும் அவன் முதிய தாயும் கவலையற்று ன்பமாக வாழ்ந்து வந்தனர்.

மூத்தமகன் தன் தாயையும் இளைய தம்பியையும் விரைவில் மறந்து விட்டான். அவர்கள் போனதால் தனக்கு ஏற்படும் மிச்சத்தைக் கணக்கிட்டும், தன் செலவுகளை இன்னம் குறைத்துப் பொருள் திரட்டும் வகைகளைக் கணக்கிட்டும் அவன் நாள் போக்கினான். ஆனால், அவன் முயற்சி பெரிதானாலும், சேர்ந்த பொருள் சிறிதாகவே இருந்தது. சிலசமயம், எதிர்பாராத நோய் ஏற்பட்டு, அவன் உழைப்பைக் குறைக்கும். சிலசமயம், மற்றப் பண்ணைகளின் விளைச்சல் பெருகியதால், பொருள் மலிவாகி