சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5
(267
விடும். அவன் விளைச்சல் பெரிதானாலும், கணக்கிட்ட அளவு விலை அவனுக்குக் கிட்டாது. இந்நிலையில் பணத்தை எண்ணிக்காத்து அவன் மனமுளைந்து வாழ்ந்தான்.
இளையமகனின் புதிய பண்ணையின் புகழ் இந்நிலையில் அவனுக்கு எட்டிற்று. அது யாரோ ஒருவர் என்று எண்ணியபோதே அவனுக்குப் புழுக்கம் பெரிதாயிருந்தது. ‘நான் எவ்வளவு ஈயாகத் தேடி எறும்பாகச் சேர்த்து வைத்தும் இந்தப் புதுச்செல்வனவ்வளவு திரட்ட முடியவில்லையே! என்று அவன் மனமாழ்கினான். புதிய செல்வன் வேறு று யாருமல்ல; திறமையற்றவன், சோற்றுக்குப் பாரமாயிருந்தான் என்று தாயுடன் தான் வெளியேற்றிய தன் தம்பியே, என்று தெரிந்தபோது அவனுக்குப் புழுக்கத்துடன் பொறாமையும் வீறிட்டெழுந்தது.
அவன் தன் மனைவியிடம் தன் அவப்பேற்றைக் குறித்து நொந்து குறைப்பட்டான். மனைவி, “அவர்களைப் போய்த்தான் பார்ப்போமே! அவர்கள் வளத்தையும், அது வந்த வகையையும் உசாவி உணர்ந்து வரலாம்?" என்றாள். அவனும் ‘சரி' என்று புறப்பட்டான். தம்பிக்குப் பரிசளிப்பதற்காக ஒரு மலிவான ஆடையையும் எடுத்துக் கொண்டான்.
அவர்கள் இளையமகன் வீட்டுக்கு வந்தபோது அவன் வெளியே போயிருந்தான். ஆனால், தாய் தன் மூத்த மகனையும் அவன் மனைவியையும் அன்பாக வரவேற்றாள். தங்கு தடையில்லாமல் அவள் உயரிய உணவும் வாய்ப்பு நலங்களும் அவர்களுக்கு அளித்தாள். தம்பி வந்ததும் அவனும் மற்றுமொரு முறை இன்மொழிகளால் இருவரையும் வரவேற்றான்.
தம்பி செல்வத்தைக் கண்டு அண்ணன் மகிழவில்லை. அவன் அன்பு வரவேற்புக்கும் மகிழ்ச்சி கொள்ளவில்லை. தாய் இதைக் கண்டு உள்ளூர வருத்தம் அடைந்தாள். ஆனால், தம்பி ‘அவனுக்கு வேறு ஏதேனும் வருத்தமிருக்குமானால், அறிந்து ஆவன செய்வோம்,' என்று கருதினான். “அண்ணா உங்கள் உள்ளத்தில் ஏதோ சிந்தனை செய்வதாகத் தோன்றுகிறது. தங்கள் கவலை என்ன? நான் உங்கள் தம்பி. முடியுமட்டும் உங்கள் கவலையைப் போக்குவேன்,” என்றான்.