சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
269
தனக்கு இவ்வழியை ஒளியாது கூறிய தம்பியிடம் அவனுக்கு நன்றி யில்லை. அவனைவிடத் தான் மிகப் பேரளவில் திரட்டி, அவனைவிடப் பெரிய பண்ணை
பணம்
வைத்தாளவேண்டும் என்ற போட்டியுணர்ச்சியும், வீம்பு உணர்ச்சியுமே அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன. அவன் அரிமாவிடம் இரைந்து பேசினான்;
66
எனக்குப் பெருஞ் செல்வம் வேண்டும். மிகப் பெருஞ்செல்வம் வேண்டும்." இதுவே அவன் வணங்கிய வணக்க வழிபாடாயிருந்தது. அரிமா வாய்திறந்து பேசிற்று.
“நீ யார்? உனக்கு ஏன் பெருஞ்செல்வம் வேண்டும்?” என்று கேட்டது. “சில நாட்களுக்கு முன் நீ ஒரு மரத்தொட்டி நிறையப் பொன் காசு கொடுத்தாயே, அந்த மனிதன் அண்ணன் நான். நீ சொல்லாமலே அவனைவிடப் பெரிய தொட்டியும் வாங்கி, அவனைவிடப் பெரிய மெழுகுத்திரிகளும் கொண்டு வந்திருக்கிறேன். அவனைவிட மிகுதியான செல்வம் எனக்கு வேண்டும். விரைவில் கொடு,” என்றான்.
அரிமாவின் உள்ளிருந்து ஒரு கனைப்புக்குரல் கேட்டது. அது கூறிற்று. "அப்படியா? சரி. தொட்டியை என் முன்வை. ஆனால், தொட்டி எவ்வளவு பெரிதாயிருந்தாலும், ஆது நிரம்பி வழியுமுன் நீ ‘போதும்' என்று கூறிவிட வேண்டும். ஏனென்றல், ஒரு காசு கீழே மண்ணில் விழுந்துவிட்டால் கூட, அதற்குப்பின் ஏற்படும் தீமைக்கு நான் பொறுப்பாக முடியாது" என்றான்.
"ஓகோ, அஃதெல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ மட்டும் வாயை அகலத்திறந்து நிறையப் பொன் சொரிய வை!" என்று அவன் படபடப்புடன் கூறினான். அரிமா வாய்த்திறந்தது. பொன்னருவி பாய்வது போலப் பொற்காசுகள் கலகலவென்ற இனிய குரலுடன் தொட்டியில் வந்து விழுந்தன. பேராவலுடனும் பெருமகிழ்ச்சியுடனும் பொன்னருவியையே பார்த்தவனாய் அவன் உணர்ச்சி பொங்க நின்றான்.
தொட்டி விரைவில் நிறைந்துவிடாதபடி அவன் அடிக்கடி அதைக் குலுக்கினான். பொன் காசுகளை அதில் அடர்த்தியா யிருக்கும்படி திணித்தான். அப்படியும் தொட்டி நிரம்பத்