அப்பாத்துரையம் - 36
270 || தொடங்கிற்று. அவன் தொட்டி நிரம்புவதில் கருத்துச் சலுத்தாமல் பொன்னருவியையே பார்த்துக் கொண்டிருந் தான். போதும் என்று அவன் சொல்லவில்லை.
பொன் காசுகள் வழிந்து கீழே விழுந்தன. பொன் அருவி நின்றுவிட்டது. அவன் கையை அதன் வாயில் நுழைத்தான். அரிமா வாய் மூடிற்று. அவன் கை கல் பிளவில் இறுக்கமாகப் பற்றப்பட்டுவிட்டது. அவன் கையை இழுத்துப் பார்த்தான். ஆடினான், அலறினான்; அரிமாவைத் திட்டினான். அதன் மீது காலால் ஏற்றினான்; அல்லல்பட்டான்; எதுவும் பயனில்லை; கல் அரிமா கல்லாகவே இருந்துவிட்டது.
மூத்தவன் மனைவி தன் கணவன் பெரும் பொருளுடன் திரும்பி வருவான் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தாள். மாலை சென்று இரவு ஏறஏற அவள் படபடக்கும் நெஞ்சுடன் அவன் வரவை எதிர்பார்த்தாள். நள்ளிரவாகியும் அவன் வராதபோது, அவளைக் கவலைகள் பிடுங்கித்தின்றன.
இளையவன் கூறிய செய்தி உண்மைதானோ அல்லவோ என்று ஐயுற்றுச் சிலசமயம் அவள் மனம் ஊசலாடிற்று. பணப்பேரவா வரவரத் தணிந்தது. பணமில்லாவிட்டாலும் போகட்டும். கணவன் திரும்பி வரவேண்டும் என்று அவள் ஏங்கினாள். பொழுது விடிந்ததும் அவள் தானே மலையேறி வந்தாள்.
கணவன் இருந்த நிலைகண்டு அவள் திகைத்தாள். கல்லில் சிக்கிய கையுடன் அவன் இரவு முழுதும் கல்லில் சாய்ந்தே நின்றிருக்க வேண்டியதாயிற்று. உட்காரவோ படுக்கவோ முடியாமல் கல்லில் சிக்குண்டகை தடுத்தது; பசியாலும் நீர் வேட்கையாலும் அவன் உணர்வு குன்றினான். மனைவி அருகிருந்து நீர் கொண்டுவந்து கொடுத்தாள். வீடுசென்று ணவு கொண்டுவந்து கொடுத்தாள். ஆனால் இனி என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை.
0
தனக்கு நடந்த எல்லாவற்றையும் அவன் தன் மனைவி யிடம் கூறினான். தன் பேரவாவுக்கு அப்போதும் அவன் வருந்தவில்லை. எப்படித் தப்புவது என்று எண்ணமிட்டுத்தான் கவலையுற்றான். “சரி, நீ தொட்டியில் நிரப்பிய பொன்