சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
271
என்னவாயிற்று" என்று கேட்டாள் மனைவி. அவன் எதிரே சுட்டிக் காட்டினான். தொட்டி நிறையக் கற்கள்தான் இருந்தன. அரிமா வாய்மூடியதும் பொன் காசுகள் கற்களாயின.
மனைவி நாள்தோறும் உணவும் நீரும் கொண்டு வந்து கொடுத்து, அவனுக்கு ஆறுதல் கூறினாள். ஆனால், இப்படி நெடுநாள் இருக்கமுடியாது என்பதை அவளும் அறிந்தாள். ஒருநாள், அவள் அழாக் குறையாக அவனிடம் தன் இக்கட்டுகளை எடுத்துக் கூறினாள்.
“வரும்படி இல்லாத நிலையில் நான் என் நகையை விற்று இதுவரை என் வாழ்வு கழித்து, உங்களுக்கும் உணவு முதலியன காண்டுவந்தேன். என்னிடம் இப்போது ஒரு செப்புத் துட்டுக்கூட இல்லை, என்ன செய்வது?” என்றாள் அவள்.
66
அரிமாவின் கல் உடல் குலுங்கிற்று. அது, ஆகா, ஆகாகா,” என்று சிரித்தது. அந்த நேரம் பார்த்து மனைவி விழிப்புடன் கணவன் கையை வெளியே இழுத்தாள். இருவருமாக இப்போது இளையவனை நாடிச் சென்றார்கள். அவர்கள் கதை முழுதும் கேட்ட இளையவன் வருத்தமுற்றான்.
அண்ணனுக்கு ஒரு சிறிய பண்ணை புதிதாக ஏற்படுத்து வதற்குப் போதிய பணம் தருவதாகக் கூறினான். ஆனால், தாய் குறுக்கிட்டு, மூத்த மகனிடம், "அப்பா, உனக்கு இதுவரை கிடைத்த தண்டனை தகுதியுடையது என்பதை மறந்து விடாதே. அது உன் பேராவாவினால் வந்தது. அதுமட்டு மல்ல கல் அரிமாவின் செய்தியை உனக்குச் சொன்ன தம்பியிடம், உ நன்றியும் இல்லாமல் போயிற்று. அவன் பணமில்லாதபோது நீ அவனை உன் தாயுடன் வெளியேற்றினாய். இப்போது நீயும் உன் மனைவியும் அதே நிலையில் வந்தபோது அவன் எப்படி நடந்துகொள்கிறான், பார்," என்றாள்.
உனக்கு
அண்ணன் தன் பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்து விட்டுத் தம்பியிடம் நன்றிகூறிச் சென்றான்.