34. தம்பி நாகன்
தென் அமெரிக்கா நாட்டுக் கதை)
ஒரு காட்டின் அருகே மாரிகிதா என்ற ஓர் அழகிய இளம்பெண், தன், இரண்டு அண்ணன்மாருடனும் தந்தை யுடனும் வாழ்ந்தாள். அண்ணன் மாருக்குத் தான் ஒரு தங்கை இருப்பது போல, தனக்கு ஒரு தம்பி இல்லையே என்று மாரிகிதா அடிக்கடி வருந்தினாள். ஆனால், அவள் வாழ்வில் எப்படியோ எதிர்பாராத வகையில் ஒரு எதிர்பாராத தம்பி வந்து சேர்ந்தான். அவன்தான் தம்பி நாகன். அவன் ஒரு மனிதஇனத் தம்பியல்ல, நாகஇனத் தம்பி.
ஒருநாள் மாரிகிதா தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு கொடிய கழுகுக்கு அஞ்சி ஒரு சிறு பாம்புக்குஞ்சு அவளருகே ஓடிவந்தது. அவள் உடனே இரக்கமுற்று அதைத் தன் வெற்றிலைச் செல்லத்துக்குள் எடுத்து வைத்துக் கொண்டாள்.
பாம்புக்குஞ்சு செல்லத்துக்குள் இருந்தபடியே “அக்கா, நீ செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன்," என்றது.
அவளைத் தங்கையென்று அழைத்தவர் உண்டு. அக்கா என்று அழைத்தவர் யாரும் கிடையாது. “அக்கா” என்று அழைத்த பாம்பிடம் அவள் தம்பிக்காக அலந்த அலப்பு முழுதும் சென்றது. அவள் நாள்தோறும் தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை அதற்கு அளித்தாள். தன் துணிமணிகளில் ஒவ்வொன் றாகக் கத்தரித்துத் தைத்து அதற்குத் தனியாக ஒரு பெட்டி யினுள்ளே படுக்கை தலையணை ஆகியவை செய்தாள். நாகத் தம்பியாகிய தம்பிநாகன் அவள் அன்பாதரவால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
66
ஓய்ந்த நேரமெல்லாம் மாரிகிதா தனியிடம் சென்றிருப்பாள். 'தம்பி நாகா, தம்பி நாகா, உனக்கு என்ன வேண்டும்?" என்று