(274
||
66
அப்பாத்துரையம் - 36
அம்மா,நாங்கள் பாம்பை விட்டுவிட்டுத் திரும்பி வருகையில், திடீரென்று பின்னே சலசல என்ற அரவம் கேட்டது. நாகள் எங்களைத் தொடர்ந்து விரைந்து வருவதுகண்டு அஞ்சினோம். எங்கள் உயிரைத்தான் குடிக்க வருகிறான் என்று நடுநடுங்கினோம். ஆனால், கிட்டவந்ததும், தன் வாயில் சுருட்டி வைத்திருந்த மூன்று பழங்களை எங்கள் முன் வைத்துவிட்டுப் பறந்தோடிற்று. நாங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றியாக, அந்தப் பழங்களை எங்களுக்குத் தரவே அது இவ்வளவு விரைந்து வந்து எங்களை அச்சுறுத்தியது என்று அறிந்தோம்,” என்றான்
வேலையாள்.
இது கேட்ட மாரிகிதா களுக்கென்று சிரித்தாள்.
அவள் சிரித்த சிரிப்பிலிருந்து உதிர்ந்த முத்து மணிக்கற்கள் அந்த முறை முழுதும் சிதறின.
தம்பி நாகன் வரங்கள் மூன்றில் ஒன்றின் உண்மை மெய்யாகிவிடவே, மாரிகிதா மற்ற இரண்டையும் தேர்ந்து பார்த்தாள். அன்று அவள் உதிர்த்த முடியும் கைகழுவிய நீரும் மறுநாள் தங்கக் கம்பிகளாகவும் வெள்ளிப்பாளமாகவும் மாறி இருந்தன.
மாரியின் அண்ணன்மார்கள் இவற்றையெல்லாம் பார்த்தனர். இத்தகைய புதுமைவாய்ந்த தங்கையை ஓர் அரசனைத் தவிர வேறு யாரும் மணம்புரியக் கூடாதென்று அவர்கள் முடிவுகட்டினர். இந்த எண்ணத்துடன் அவர்கள் அரசவையில் சென்று அவையோருடன் கலந்து கொண்டனர். அரசன் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் சமயம்பார்த்து, அவர்கள் தங்கள் குடும்பச் பேச்சை எடுத்தனர். “அரசே, எங்களுக்கு மிகப் புதுமை வாய்ந்த ஒரு தங்கை இருக்கிறாள். அவள் சிரிக்கும்போது முத்துக்கற்கள் உதிர்கின்றன. கை கழுவியநீர் வெள்ளிப் பாளமாகிறது. சீவி உதிர்ந்த முடி தங்கக் கம்பியாகிறது,” என்றார்கள்.
66
"அப்படியா? அப்படியானால் அவளை நான் மணந்து கொள்கிறேன்," என்றான் அரசன். அடுத்த நாளே அரசனின் தூதுவர்கள் மாரிகிதாவின் தந்தையிடம் சென்று பெண் கேட்டனர். அவனும் மகிழ்வுடன் இணங்கினான். மாரிகிதாவை