பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

275

எஃச்திஃவானியா என்ற தோழியுடனும் அவள் தாயான செவிலியுடனும் அனுப்பிவைத்தான்.

எஃச்திஃவானியாவும்

செவிலியும் அவள் மகள் பேராவற்காரிகள். அவர்கள் இருவரும் மாரிகிதாவின் நல்வாய்ப்புக் கண்டு பொறாமை கொண்டனர். அவளைக் கொன்றொழித்து அவள் இடத்தில் அவள் வாய்ப்பு நலங்களைத் தானே பெற எஃச்திஃவானியா விரும்பினாள். ஆகவே, தாயும் மகளும் காட்டுவழியில் மாரிகிதாவைத் தாக்கி அவள் கண்களைப் பிடுங்கினர். அந்நிலையில், காட்டு விலங்குகளுக்கு இரை யாகட்டும் என்று அவளை விட்டுவிட்டு, அவர்கள் அரசனிடம் சென்றனர் எஃச்திஃவானியாவையே மாரிகிதா என்று நம்பவைத்ததனால், அரசன் அவளை மணந்துகொண்டான்.

மாரிகிதாவின் கண்கள் அழகாயிருந்ததனால், எஃச்திஃவானியாவின் தாய் அவற்றை எறிந்துவிடாமல் ஒரு கண்ணாடிச் சிமிழில் அடைத்து வைத்துக்கொண்டாள்.

ச்

எஃச்திஃவானியாவிடம் மாரிகிதாவின் அண்ணன்மார் கூறிய பண்புகள்

பண்புகள் இருக்கின்றனவா என்று மன்னன் முதல்நாளிலேயே தேர்ந்து பார்த்தான். அப்பண்புகள் ஒரு சிறிதும் இல்லை என்று கண்டவுடனே, அவனுக்கு அவர்கள்மீது கடுஞ்சீற்றம் ஏற்பட்டது. அவனைப்போலவே அவர்களுக்கும் மாரிகிதாவின் இடத்தில் எஃச்திஃவானியா இருப்பது தெரியாதாதலால், அவர்கள் விழித்தார்கள். அரசன் அவர்களைக் கொன்று பிணங்களைக் கோட்டைக்கு வெளியே எறியச் செய்தான்.

மாரிகிதா என்று நினைத்த எஃச்திஃவானியா மன்னன் சீற்றத்துக்கு ஆளாகவில்லை. அரசி என்ற பெயரால் அவள் தப்பினாள். அவளும் அச் சீற்றத்துக்கு அஞ்சி நடந்து கொண்டாள்.நல்ல காலமாக அவள் விரைவில் கருவுற்றாள். நல்ல காலமாக அவன் விருப்பமறிந்து நடக்க முயன்றாள். அவளும் ஒவ்வொரு நாளும் தான் கண்ட ஏதேனும் ஒரு புதுப்பொருளை வாங்கி மனமகிழ்ச்சியுடன் இருந்தாள்.

காட்டில் விடப்பட்ட மாரிகிதா கண் தெரியாமல் மயங்கினாள். அதேசமயம் காட்டில் பலவகைக் கொடு