பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(276) ||__.

அப்பாத்துரையம் - 36

விலங்குகளின் குரல்களும் அவள் செவிகளிற்பட்டு அவளைக் கலங்கவைத்தன. சிறிது நேரத்தில் இடியும் மின்னலும் புயலும் மழையும் வந்து அவளை இன்னும் அலைக்கழித்தன. காலையில் புயலில் அடிப்பட்ட இழைதழை சகுருகளுடன் அவளும் ஒரு லை தழை சருகு மூடிய இளந்தளிராகச் சோர்ந்துகிடந்தாள்.

காட்டில் விறகுதேடப் புறப்பட்ட ஒரு கிழவன் புயலில்சிக்கி, விறகுக்காக கொண்டுவந்திருந்த கழுதையுடன் திரும்பிக் கொண்டிருந்தான். மாரிகிதாவின் நிலை கண்டு இரங்கி அவளை ஓரளவு தேற்றி உணர்வு வருவித்துத் தன் கழுதையிலேற்றி வீட்டுக்குக் கொண்டு வந்தான்.

கிழவன் பிள்ளையற்றவன் அல்ல. அவனுக்கு ஐந்து பெண்மக்கள் இருந்தார்கள். அவன் எப்போதும் கழுதையுடன் கழுதையாக உழைத்தாலும், அவர்கள் அவனை ஓயாது கடிந்து குறைகூறியே வந்தனர். விறகுக் கட்டினிடமாக ஒரு பெண்ணை அவன் கூட்டிக்கொண்டு வந்ததே, அவர்கள் அவன்மீது சீறி விழுந்தார்கள். மாரிகிதாவையும் அவர்கள் வைதும் அடித்தும் இழிவு படுத்தினர். இதைக்கண்ட கிழவன் உள்ளம் பெரிதும் துணுக்குற்றது.

மாரிகிதாவின் பொறுமை அந்த ஐவரில் ஒருத்தியின் மனத்தைச் சிறிது இளக்கிற்று. அவள் மற்றவர்கள் கொடுமை களைக் கடிந்து மாரிகிதாவைத் தன்னுடன் படுக்கவைத்துக் கொண்டாள். மாரிகிதா அவளுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்க விரும்பினாள்.

அவள் தன் கைகளைக் கழுவ நீர் கோரினாள். மற்றவர்கள், "போய் ஆற்றில் கழுவு போ,” என்றார்கள். ஆனால், இளகிய மனமுடையவள் வட்டிலில் நீர் கொண்டு வந்தாள். மாரிகிதா கை கழுவியபின், “இதே நீரை நாளை வைத்திருந்து கொடு," என்றாள்.

அவள் புதிதாகத் தண்ணீரைச் செலவுசெய்ய அஞ்சு கிறதாக அத்தோழி எண்ணினாள். ஆனால், மாரிகிதா மீண்டும் வற்புறுத்தவே, மற்றவர்களுக்குத் தெரியாமல் வட்டிலைப் புதரிடையே மறைத்துவைத்தாள். வைக்கும்போது ஒன்றிரண்டு சொட்டுத் தண்ணீர் நிலத்தில் சிந்திற்று.