பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

277

ரவு தலை கோதியபின் முடிகளையும் மாரிகிதா வைத்திருந்தாள்.

மறுநாள், வட்டில்நீரை விறகுவெட்டி மகள் சென்று எடுக்கப்போனாள். தண்ணீர் சிந்திய இடத்தில் வெள்ளித் துண்டுகள் கிடந்தன. வட்டில் உட்புறம் ஒரே வெள்ளிப் பாளமாய் இருந்தது. அதை அவளால் எளிதில் தூக்க முடிய வில்லை. தூக்கிய போதும் பளுவால் வட்டில்தான் உடைந்தது; பாளம் அப்படியே கையில் நின்றது.

மாரிகிதா அத்தோழியிடம், "இந்த வெள்ளியை உன் தந்தையிடம் கொடுத்து விற்கச் சொல். அவர் னி விறகுவெட்ட வேண்டியதில்லை,” என்றாள்.

இன்னொரு மகளை அழைத்துத் தங்கக் கம்பிகளாய் விட்ட தலை முடிகளைக் கொடுத்து, "உன் தந்தையிடம் இவற்றைக் கொடுத்து விற்கச் சொல். அவர் இனி விறகு வெட்டவேண்டிய தில்லை,” என்றாள்.

விறகுவெட்டியின் வீடு இப்போது செல்வர் வீடாயிற்று. அவன் புதல்வியரும் நல்ல ஆடையணி மணி பூண்ட உயர் நங்கையராயினர்.

மாரிகிதாவின் செல்வம் உண்டுபண்ணும் ஆற்றல்களைக் கண்ட விறகுவெட்டியின் மக்கள் அனைவருமே இப்போது அவள் குறிப்பறிந்து நடக்கும் தோழிகள் ஆயினர்.

ஒருநாள் தோட்டத்தின் பின்புறம் காட்டை நோக்கி இருந்த வாசற் படியிலிருந்த மாரிகிதா தலைகோதிக் கொண்டிருந்தாள். அவள் தோழியர் சற்றுத் தொலைவில் பேசிக் கொண்டிருந்தனர். திடுமென அவர்கள் அச்சத்துடன் அவளை அணுகி,

"மாரி, உடனே ஓடிவிடு உன்னை நோக்கி ஒரு பெரும்பாம்பு விரைவாக வருகிறது," என்றனர்.

மாரிகிதா பாம்பைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அது தம்பி நாகனாயிருக்கலாம் என்று எண்ணி அவள் வாளா இருந்தாள். “அது ஒன்றும் செய்யாது. அஞ்சாதேயுங்கள்” என்றாள்.