பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(278) || __ __

அப்பாத்துரையம் - 36

அவள் நினைத்தபடி அது தம்பிநாகன்தான். அது அவள் அருகே வந்து உராய்ந்தது அவள் அதைத் தடவிப் பார்த்தாள். உடனே அதற்கு ஏதோ ஐயம் ஏற்பட்டது. அது தலையை உயர்த்தி அவள் முகத்தை உற்றுப் பார்த்தது. “ஐயோ அக்கா, நான் கேள்விப்பட்டேன். அந்தப் படுபாவி உன் கண்ணைப் பிடுங்கியது உண்மைதான் கண் தெரியாமல் நீ என்ன துன்பம் அடைகிறயோ!" என்று கூறி பாம்பு வருந்தியது.

அவள் பாம்புடன் பழக்கமாகிப் பேசுவது கண்ட தோழியர் பின்னும் வியப்படைந்தனர். அதனால், அவள் மதிப்பு இன்னும் உயர்ந்தது.

தம்பி நாகன் இப்போது மாரிகிதாவிடம் ஒரு அழகிய பூஞ்செண்டைக் கொடுத்தது. "இதை யாரிடமாவது அனுப்பி எஃச்திஃவானியாவிடம் விற்பனைக்குக் கொண்டுபோகச் சொல். ஆனால், இதற்கு விலை இரண்டு கண்கள் என்று சொல்லட்டும். உன் கண்கள் அவள் தாயிடம் இன்னும் இருக்கின்றன. அவை வந்ததும் உன் கண்களைக் குணப்படுத்துகிறேன்,” என்றது.

மாரிகிதா அவ்வாறே செய்தாள். விறகுவெட்டியாக முன் இருந்த அவள் தோழியரின் தந்தையே அதைக் கொண்டு சென்றான்.எஃச்திஃவானியா புதுப்பொருள் கண்டதும் வாங்கும் வழக்கப்படி, அதை வாங்க முனைந்தாள். அதற்கு விலை இரண்டு கண்கள் என்று கேட்டதும் அவள் என்ன செய்வது என்று விழித்தாள். ஆனால், அவள் தாய் உடனே மாரிகிதாவின் கண்களை நினைத்துக் கொண்டு, அவற்றைப் போய் எடுத்து வந்தாள்.

கண்கள் வந்து சேர்ந்ததும் தம்பி நாகன் அவற்றை ஒவ்வொன்றாகத் தன் பிளந்த நாவின் நுனியில் வைத்து அவள் கண்குழியில் ஊதிற்று. கண்கள் உடனே பொருந்திக் கொண்டன. கண்கள் முன்னிலும் அழகா யிருந்தன. அவள் பார்வை முன்னிலும் கூர்மையுடையனவாயிருந்தன.

அவள், தம்பிநாகனை எடுத்து முத்தமிட்டுக் கொண்டாள். அவள் கண்பெற்ற கதை கேட்டுத் தோழியரும் அவர்கள் தந்தையும் மகிழ்ந்தனர்.