சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
279
தம்பிநாகன் ஒருநாள் மாரிகிதாவிடம் வந்து மற்றுமோர் திட்டம் கூறிற்று. அவள் பாம்பு இனத் தம்பியின் அறிவை மெச்சி அதன்படி நடக்க இணங்கினாள்.
அடுத்த நாள் இருவரும் அரசன் அரண்மனை சென்றனர். தம்பிநாகன் எளிதில் காவல் கடந்து சென்றான். மாரிகிதா தன் பை நிறையத் தங்கக் காசுகள் கொண்டு சென்றிருந்தாள். அவற்றைக் காவலர் முன் வீசி எறிந்தாள்.
கீழே சிதறிக்கிடந்த அக்காசுகளைப் பொறுக்க அவர்கள், ‘நீ முந்தி நான் முந்தி!' என்று போட்டியிட்டனர்.இதுதான் சமயம் என்று மாரிகிதாவும் உள்ளே சென்றாள்.
மன்னன் எஃச்திஃவானியாவுடன், பேசிக்கொண்டிருந்தான். “தம்பிநாகா, தம்பிநாகா, என்ன பார்க்கிறாய்?” என்றாள்
மாரிகிதா.
"அக்கா மாரிகிதா, அக்கா மாரிகிதா! மன்னன் மடியில் எஃச்திஃவானியாவல்லவா இருக்கிறாள்,” என்றது தம்பி நாகன்.
“ஆ,நான் இங்கிருக்க, என் வேலைக்காரியா அங்கிருக்கிறாள்,” என்றாள் மாரிகிதா. மன்னன் உடனே எஃச்திஃவானியாவைத் தள்ளிவிட்டு வெளியே வந்தான்.
அதற்குள் மாரிகிதா பொன்காசை மீண்டும் காவலர் களிடையே எறிந்துவிட்டு வெளியே வந்தாள். தம்பி நாகனும் வெளியே வந்து அவளுடன் சேர்ந்தான். இந்த நாடகம் மறுநாளும் நடந்தது.
அவளைப் பிடிக்கும்படி அரசன் தன் காவலர்களுக்கு ஆணை யிட்டிருந்தும் அவர்கள் பொன்னாவலால் கடமை தவறிவிட்டனர்.
மூன்றாவதுநாள் மன்னன் தானே முன்னேற்பாடா யிருந்தான். பேச்சுகளைப் பேசிமுடிக்குமுன்பே அவன் மாரிகிதாவை வந்து பிடித்துக் கொண்டு நீ கூறுவது உண்மையா? என்று கேட்டான். “உண்மையென்பதை எஃச்திஃவானியாவை முன்தேர்ந்தாராய்ந்தது போல, இப்போது ஆராய்ந்து காண்பதுதானே!" என்று தம்பி நாகன் கூறிற்று.