பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ||

அப்பாத்துரையம் - 36

பாம்பு பேசியது கேட்டு மன்னன் வியப்படைந்தான். 'உனக்கு என்ன தெரியும் நீ பாம்புதானே!' என்று மன்னன் தம்பி நாகனைப் பார்த்துக் கேட்டான்.

66

“ஆம். நான் அரசனல்ல!” என்றது தம்பி நாகன். மாரிகிதா உடனே சிரித்தாள். மன்னன் ஆடைகளிலெல்லாம் முத்தும் மணிக்கற்களும் சென்று உருண்டன. மன்னன் ஒரு தேர்வைக் கண்கூடாகக் கண்டுவிட்டான். அவன் எஃச்திஃவானியாவையும் அவள் தாயையும் உடனே சிறை செய்வித்தான். அன்று, அவனே அவள் தலையைக் கோதி உதிர்ந்த முடிகளைச் சேமித்தான். அவனே வட்டிலில் தண்ணீர் கொண்டுவந்து அவளைக் கைக்கழுவ வைத்தான்.”

கட்

முடிகள் பொன்முடிகளானதையும், நீர் வெள்ளிப்பாள மானதையும் அவன் கண்டான். அவன் மாரிகிதாவைக் டியணைத்துக் கொண்டான். 'உன்னை நான் மணந்து கொள்வது உறுதி. ஆனால். இவளைத் தூக்கிடப் போகிவேன்,' என்றான்.

மாரிகிதா, "வேண்டாம். அவள் அரசியாயிருந்தவள். அவளுக்கு வேண்டிய பொன்னும் மணியும் தந்து வேறு நாட்டுக்கு அனுப்பிவிடுங்கள். பிழைத்துப் போகட்டும்,” என்றாள்.

பின் தம்பி நாகனை நோக்கி, “தம்பி, நீ எனக்குக் கண்ணும் தந்தாய், கணவனையும் அளித்தாய்; உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள்.

அவள் குறிப்பறிந்த அரசன், பாம்புக்குப் பாலும் பழமும் தருவித்து அதை அன்புடன் உண்பித்தான்.

மாரிகிதா மன்னனை மணந்து அரசியானாள்.

அரசி மாரிகிதாவுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன. ஒருவன் தொட்டிலிலும் ஒருவன் கையிலும் இருந்தான். அவள் மன்னனிடம் இருவரையும் காட்டி “இவர்களில் எந்தப் பிள்ளை உங்களுக்குப் பிடித்திருக்கிறது," என்று கேட்டாள்.

"இருவருமே எனக்குப் பிடித்திருக்கிறது,” என்றான் அரசன். இச்சமயம் தம்பிநாகன் குரல் அருகில் கேட்டது.