பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(284) ||

அப்பாத்துரையம் - 36

அவையோர் அஞ்சினர்; மக்கள் கலங்கினர்.

“என்முன் இவ்வாறு பேசத்துணிந்த இந்தத் தலையை உச்சி மலைமீது இட்டுச்சென்று உருட்டித் தள்ளுங்கள். அவன் உடல் சந்துசந்தாகச் சிதைந்தபின், அதன் குருதியை என்முன் கொண்டு வந்து காட்டுங்கள்,” என்று அவன் ஆணையிட்டான்.

திண்ணிய தோள் படைத்த வீரர் நால்வர் இளவரசனைச் செந்தூக்காகத் தூக்கிச் சென்றனர். புலிக் கூட்டத்தால் கௌவிச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போல, அவன் மலைமீது விரைந்து கொண்டு போகப்பட்டான்.

இளவரசன் திடுக்கிட்டான். திண்டாடினான். செய்வது இனி ஏதுமில்லையெனத் தேறினான். தன் உயிர் இனி நில்லாது என்று துணிந்து சென்றான்.

அவர்கள், அவனைக் கீழே இறக்கினர். சாகத் துணிந்து, சாவை எதிர்பார்த்து நின்றான் இளவரசன்.

ஆனால், வீரர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வாளாநின்றனர்.

ஒருவன் இருமினான்!

ஒருவன் கனைத்தான்!

ஒருவன் ஒரு பொட்டுக் கண்ணீர் வடித்தான்!

நாலாவது வீரன்-நால்வரினும் திண்ணிய உடலும், அஞ்சா நெஞ்சமும், கொடுந்தோற்றமும் உடையவன். அவன் முதன் முதலாக வாய்த் திறந்தான்.

"இளவரசே! உங்களிடம் நாங்கள் கொண்டுள்ள பாசம் பெரிது. உங்களை நாங்கள் கொல்லமுடியாது.நாங்கள் கொல்லத் துணிந்தாலும், எங்கள் கைகள் எழமாட்டா; கைகள் எழுந்தாலும் எங்கள் வீரவாள்கள், கொலைவாள்கள் எங்கள் கைக்கு இணங்கமாட்டா.

66

ஆனால், நாங்கள் ஏவலாட்கள். எங்கள் அரசர் ஆணையை நாங்கள் மீறக்கூடாது,”

"ஆகவே, உம் சட்டையைக் கழற்றிக்கொடும். நேரமாகிறது. எங்களை மன்னிக்கவேண்டும்,” என்றான்.