சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
285
இளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், சட்டையைக் கழற்றிக் கொடுத்தான். அவர்கள் தன் சட்டையை அகற்றிவிட்டுக் கொல்ல நினைப்பதாகத்தான் அவன் அப்போது எண்ணினான்.
66
இளவரசே, அரசராணைப்படி உம்மை மலையில் கொண்டுவந்து விட்டோம். அரசராணைப்படி கொன்று குருதி காட்டவேண்டும். ஆம் நாங்கள் கொல்வோம் ஏதேனும் ஒரு மலைவிலங்கைப் பிடித்துக் கொன்று குருதியை இந்தச் சட்டையில் தோய்த்துக் காட்டிவிடத் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், நீர் இனி இந்த நாட்டுக்கே வரக்கூடாது.மன்னன் அறிய நீர் மாண்டவராகவே இருக்கவேண்டும். இது எங்கள் கட்டளை இல்லை, இல்லை-மன்னிக்க வேண்டும். எங்கள் வேண்டுகோள்,' என்று மேலும் கூறினான்.
இளவரசன் அவர்கள் அன்புள்ளத்தின் அங்கலாய்ப்பைக் கண்டு, அவர்கள் முடிவுக்கு மகிழ்ந்தான். அவர்கள் அன்புக் கட்டளையை நிறை வேற்ற உறுதி கூறினான்.
சாவினின்று மீண்டான் இளவரசன்; ஆனால், அவன் உள்ளம் மகிழவில்லை; அவன் காடுகளும் மலைகளும், கானாறுகளும் தாண்டி நடந்தான்; எங்கே செல்வது, என்ன செய்வது என்ற திட்டம் எதுவும் அவனிடம் கிடையாது.
அவன் சாக விரும்பவில்லை; ஆகவே, சாவிலிருந்து மீண்டதற்கு மகிழ்ந்தான்; ஆனால், வாழ்விலும் அவனுக்குப் பற்று எழவில்லை; உலகை விட்டொழிந்து சாகவும் விருப்பமில்லாமல், உலகிலிருந்து வாழவும் மனங்கொள்ளாமல் அவன் அலைந்து திரிந்தான்.
பல நாட்களுக்குப் பின்னர் அவன் தொலைவிலுள்ள ஒரு நாடு சென்றடைந்தான்.
அவன் கால்கள் நடக்க மறுத்தன. அவன் அந்நாட்டில் தங்க எண்ணினான்.
நகரில் நுழையாமல் முதல்முதல் கண்ட வீட்டிலேயே சென்று அவன் கதவைத் தட்டினான். மூதாட்டி ஒருத்தி வந்து கதவைத் திறந்தாள். ளவரசன் அவளிடம், "ஒருநாள் ஓய்ந்திருக்க இடமும் உணவும் வேண்டும்,” என்று மன்றாடினான்.