(286)
66
அப்பாத்துரையம் - 36
'அன்னையே, நான் மிகப் பெருந் தொலைவிலிருந்து நெடுநாள் நடந்து வந்திருக்கிறேன். சற்று மனமிரங்கி உதவ வேண்டும்,” என்றான்.
கிழவி குழந்தையற்றவள், இளவரசன் பால்வடியும் ளமுகம், அவள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அவனிடம் அவளுக்குப் பிள்ளைப்பாசம் ஏற்பட்டது. அவள், அவனிடம் அன்புமொழிகள் பேசி அவனுக்கு ஆதரவு தந்தாள். பெற்ற தந்தையின் வெறுப்புக்காளான தனயனுக்குப் பெறாததாய் ஒருத்தி கிட்டினாள்.
அந்த நாட்டில் சிலநாளாக அரசன் இல்லை. பழைய அரசன் காலமாகித் துயர் வரம்பு கழிந்துவிட்டது. அந்நாட்டு வழக்கப்படி புதிய அரசன் தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. நகரமக்கள் அனைவரும் அதற்காக நகர் நடுவேயுள்ள நகர்ப் பொதுவில் கூடினர். அரசவைக்குரிய மணிப்புறா கூட்டிலிருந்து திறந்துவிடப் பட்டது. அது பறந்து இறங்கி யார் தலைமீது தட்டுகிறதோ, அவனையே அந்நாட்டின் அரசனாக ஏற்பது அந்நாட்டின் பழம்பெரும் மரபு.
நகர் வெளியில் கூட்டத்துடன் கூட்டமாகக் கிழவி இளவரசனுடன் சென்றிருந்தாள்.
புறா மேகங்கடந்து பறந்து வட்டமிட்டது. அது யார் தலையில் வந்து இறங்கப் போகிறதோ என்று மக்கள் வியந்து மேல்நோக்கி இருந்தனர்; பலர் தம்மீதுதான் அது இறங்க விருக்கிறது என்று மனப்பால் குடித்தனர். ஆனால், யாரும் எதிர்பாராவகையாக அது நகருக்குப் புத்தம் புதியவனான இளவரசன் மீது வந்து தங்கிற்று.
ஒரு வெளிநாட்டான், மன்னனாவது மரபுக்கு ஊறு செய்வது என்று பெரும்பாலோர் நினைத்தனர். ஆகவே, முதல் முடிவை ஏற்காமல் அவர்கள் கிழவியையும் இளவரசனையும் பொதுவி லிருந்து வெளியேற்றிவிட்டு இரண்டாம் முறை தேர்வு தொடங்கினர்.
வெளியேறிய கிழவியும் இளவரசனும் நகர்ப் புறத்துள்ள கல்லறைக் கூடமொன்றில் தங்கியிருந்தனர்.புறாபொதுவெங்கும் ஒருதடவை சுற்றிப் பார்த்துவிட்டு, இறங்காமல் மீண்டும்