பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

அப்பாத்துரையம் - 36

வாழ்த்தினர். ஆயினும், ஒரே ஒரு குறையை மட்டும் உள்ளூரப் புழுங்கினார். வகைவகையான உணவுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டாலும் அவை அனைத்துமே உப்புக் கலவாதவையா யிருந்தன.

இரண்டு நாள் விருந்துக்குப் பின் பழைய மன்னன் தன் மாளிகையில் தன்னுடன் இருந்த அமைச்சர் புடையர்களை நோக்கி, “விருந்து வரவேற்பு எப்படி இருந்தது?” என்று

கேட்டான்.

அமைச்சர் முதலியோர்: எதிலுங் குறைவில்லை. நாங்கள் எதிர் பார்த்ததை விடப் பன்மடங்கான அன்பும் ஆதரவும் மதிப்பும் ஆர்வ ஆசாபாசமும் எமக்குக் காட்டப்படுகின்றன. ஆனால்...ஆனால்....

அரசன்:

என்ன ஆனாலென்று நிறுத்துகிறீர்கள்? ஏதேனும் குறையுண்டா?

அமைச்சர் முதலியோர்: குறை என்று கூறவதற்கில்லை. னால்... என்ன காரணமென்று தெரியவில்லை... உணவுகள் மற்றெல்லாவகையிலும் சிறப்புகள் நிறைந்திருந்தாலும் உப்பு இல்லாத ஒரு குறையினால் சுவை இழந்திருக்கின்றன. ஒரு வேளை இந்த நாட்டார் உப்பை

யிருக்கலாமோ என்று நினைக்கிறோம்.

வறுப்பவர்களா

அரசன்: ஆம். உங்கள் உணவில் மட்டுமல்ல. என் உணவில் கூட அப்படித்தான். இதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். எதற்கும் இன்று நான் கேட்டு அறிந்து கொள்கிறேன்.

அன்று உணவுக்குப் பின் இரு மன்னர்களும் தனிமையில் இருந்து நாடு, உலகம், வாழ்க்கை ஆகிய பல பொதுச்செய்திகள் பற்றிப் பேசி அளவளாவியிருந்தனர்.

அச்சமயம் பழைய மன்னன் புது மன்னனிடம் உணவைப் பற்றிய பேச்சை எடுத்தான். “நண்பரே! உங்கள் நாட்டில் மக்கள் விரும்பும் எல்லா நலங்களும் நிரம்பி இருக்கின்றன. ஆனால், உப்பு மட்டும் இந்த நாட்டில் கிடையாதோ என்று ஐயுறுகிறேன்," என்றான்.