சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
289
புதிய அரசன்: ஏன் அரசே அப்படிக் கருதுகிறீர்? நாங்கள் எங்கள் நாட்டுக்கு வேண்டிய உப்பை விளைவிப்பதுடன் நில்லாமல், உலகில் கடற்கரை இல்லாத மற்ற எல்லா நாடு களுக்கும் கூட ஏராளமாக உப்பை எற்றுமதி செய்கிறோமே! தாங்கள் இப்படி நினைக்கக் காரணம் என்னவோ?
புதிய அரசன் முகத்தில் புன்முறுவல் நிலவிற்று. ஆனால், பழைய அரசன் பின்னும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பழைய அரசன்: அப்படியானால் நீங்கள் உப்பில்லாமல் ஏன் சாப்பிடுகிறீர்கள்?
புதிய அரசன்: நாங்கள் உப்புடன்தான் சாப்பிடுகிறோம். ஆனால், உங்களுக்கு விருந்தளிக்கும் போது மட்டும் உப்பில்லாமலே உணவு சமைக்க உத்தரவிட்டேன்.
பழைய அரசன்: ஏன் அப்படி?
புதிய அரசன்: உங்களுக்கு உப்பென்றால் வெறுப்பு என்பதை நான் அறிவேன், உங்கள் நாட்டினருக்கும் அதே மாதிரிதான் இருக்கலாம் என்று நினைத்தேன்.
பழைய அரசன்: எனக்கு நீங்கள் கூறுவது புரியவில்லை அரசே! உப்பை யார் வெறுக்க முடியும்? உப்பில்லாமல் யார்தான், எப்படித்தான் வாழ முடியும்? நான் எப்போதும் உப்பை வெறுத்தது கிடையாது. உங்களுக்கு இதை யார் கூறினார்கள்?
புதிய அரசன்: வாய்விட்டுச் சிரித்தான். “அரசே! தங்கள் கடைசி மகன் உங்களை உப்பின் சுவையைப் போல் நேசிப்பதாகக் கூறியபோது, நீங்கள் அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டீர்களாமே!" என்றான்.
பேசியது தன் இளைய மகன்தான் என்று இப்போது பழைய அரசனுக்குத் தெரிந்து விட்டது. “உன் அருமையும் அறிவும் தெரியாமல் தவறாக நடந்து கொண்டு விட்டேன். மகனே! இப்போது எல்லாம் கண்டு கொண்டேன்," என்று கூறி அவன் தன் மகனைக் கட்டிக்கொண்டு இன்பக் கண்ணீர் விட்டான்.
உப்பின் விருந்துண்டனர்.
சுவையுடன் இரு ரு திறத்தினரும் அன்று