36. ஃஇனேமோவா
நியூசிலாந்து நாட்டுக் கதை
மயோரி னத்தவர் முன்னோர்களில் மாவீரர் எத்தனையோ பேர் உண்டு. ஆனால், மாவீரர் கதைகளை விட மயோரியர்களுக்கு எழுச்சியூட்டுவது அவர்கள் முன்னோர் களின் தாயும், குலமுதல்வியுமான ஃஇனேமோவாவின் வீரக் காதல் கதைதான்.
னேமோவா மயோரியர் குலத்திலேயே ஒப்புயர்வற்ற அழகுடைய இளநங்கையாக விளங்கினாள். அவள் குடும்பமும் மயோரியர் குடிகளில் தலைசிறந்தது. அவள் தந்தை உமுக்கானா, மயோரியர் வீரக்காதைகளில் பொறிக்கப்பட்டுள்ள பெருஞ்செயல்களின் மூலம் புகழும் செல்வாக்கும் பெற்றவன்.
உமுக்கானாவின் குடும்பப்பெருமை,வீரமரபு ஆகியவற்றுடன் ஃஇனேமோவின் அழகும் சேர்ந்து அக்குடும்பத்தினர் செருக்கை மிகவும் வளர்த்தன. அதன் பயனாக மயோரியர் இனத்தின் எந்த இளைஞனுக்கும் எந்த இனத்தலைவருக்கும்கூட ஃஇனே மோவைக் கொடுக்க அவன் குடும்பத்தினர் விரும்பவில்லை. எந்த இளைஞனும் ஃஇனேமோவைப் பார்க்கக் உமுக்கானா இடங்கொடுக்கவில்லை. இந்நிலையில் அவள் கன்னியாகவே காலங்கழித்து வந்தாள்.
கூட
ஆண்டுதோறும் மோகோயாத் தீவின் நடுவிடத்தில் கொண்டாடப்படும் மயோரியர் இனவிழாவிலும், அதை ஒட்டி விருந்துக் கேளிக்கைகளிலும் மட்டுமே அவளுக்கு மயோரிய இளைஞர்களைக் காணும் வாய்ப்பு இருந்தது. அத்தகைய பல தறுவாய்களில் ஒரே ஒரு இளைஞன் முகமும், குரலும், பாடலும் ஃஇனேமோவாவின் உள்ளத்தை இயக்கின. அவ்விளைஞனே தூத்தானகை. அவள், அடிக்கடி