(292
அப்பாத்துரையம் - 36
தூத்தானகையின் தந்தை வக்காவே கைப்பாப்பா என்பவன். உமுக்கானாவின் குடும்பத்தைவிட வக்காவேயின் குடும்பம் தாழ்ந்ததல்ல. ஆயினும் தூத்தானகையின் தாய் வக்காவேயின் இரண்டாவது மனைவி, அவள் ரோட்டாரு வாவுக்கு வந்து புதிதாகக் குடியேறிய ஒரு அயல்குடி மங்கை. அவளுக்குத் தூத்தானகை ஒரே பிள்ளை. வக்காவேயின் முதல் மனைவிக்கு ஒரு பிள்ளையும், மூன்றாவது மனைவிக்கு இரண்டு பிள்ளைகளும் ருந்தார்கள். வக்காவே எல்லாப் பிள்ளை களையும் போலவே தூத்தானகையையும் நடத்தினாலும், அவன் உடன்பிறந்தார் மூவரும் அவன் மீது பொறாமைகொண்டு அவனை வெறுத்தார்கள். அவன் இழிந்த பிறப்பை அடிக்கடி மறைமுகமாகச் சுட்டிக் காட்டி அவனை அவமதிக்கவும் முயன்றார்கள்.
ஃஇனேமோவாவை மணந்து கொள்ள வேண்டும் என்ற அவா பொதுவாக வக்காவேயின் புதல்வர் நால்வருக்குமே இருந்தது. அதில் அவர்களிடையே போட்டி மிகுதி. ஆயினும் மற்றவர்களும் ஒரு வகையில் ஒன்று பட்டிருந்தார்கள். யார் ஃஇனேமோவாவின் காதலைப் பெற்றாலும், இழிப்பிறப்பினனான தூத்தானகையை அவள் எந்த வகையிலும் ஏற்க மாட்டாள் என்று அவர்கள் நம்பினார்கள். ஏற்காமல் தடுக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்கள்.
வக்காவே எல்லாப் பிள்ளைகளையும் வேறு பாடில்லாமல் நேசித்தவர். ஆகவே, “நீங்கள் ஏன் உங்களுக்கிடையே போராட வேண்டும். நீங்கள் ஃஇனேமோவாவின் கையைப் பிடிக்க நேரும். சமயங்களில் அவளாக யாரிடம் கையை அழுத்துவதன் மூலமோ, புன்சிரிப்பு மூலமோ தன் காதலைத் தெரிவிக்கிறாளோ அவனே அவள் காதலை ஏற்று அவளை மணந்து கொள்ளலாம் என்று முடிவு செய்கிறேன்,” என்று கூறினான்.
இனவிழாவின் போது உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் ஃஇனேமோவாவுடன் ஊடாடி அவள் அன்பைப் பெற அரும்பாடுபட்டனர். அவள் குடும்பத்தாரோ தூத்தானகையை விட்டு வேறு யாரையாவது ஒருவரைத்தான் அவள் தேர்வாள் என்று நினைத்தனர். ஆகவே, அவர்கள் அவனைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவள் பிறரைவிட்டுத்