சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
293
தூத்தானகையைத் தெரிந்தெடுக்கக் கூடுமென்று எவரும் எள்ளளவும் கனவு கூடக் காணவில்லை.
உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் "ஃஇனேமோவா என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்; அவள் என் கையை அழுத்தினாள்; என்னை மெல்லச் சுண்டினாள்?" என்று ஒருவருக்கொருவர் கூறி வீம்படித்துக் கொண்டனர். தூத்தானகை “நான் சிரித்த சமயம், அவளும் சிரித்தாள். நான் தூதனுப்பினேன். அவளும் தூதனுப்பினாள். நானும் அவளும் தனியாகச் சந்தித்திருக்கின்றாேம். அது மட்டுமல்ல, நான் அவளைக் காதலிப்பதுபோலவே அவளும் காதலிக்கிறாள். நான் குழலூதினால் அவள் என்னோடு உடன் போக்கு நிகழ்த்துவ தாகக் கூட உறுதி கூறி இருக்கிறாள்,” என்றான்.
உடன்பிறந்தார் இதை நம்பவுமில்லை; நம்ப விரும்பவு மில்லை. “நீ ஏன் வெற்று வீம்பளக்கிறாய். நீயாவது ஃஇனே மோவாவின் காதலைப் பெறுவதாவது? உன்னைப் போன்ற இழிமகனை அவள் ஏன் எட்டிப் பார்க்கிறாள்?” என்று அவர்கள் ஏளனமாகப் பேசினார்கள்.
உடன்பிறந்தார் பேசியபடியே மற்ற மயோரியரும் பேசினர். ஃஇனேமோவாவின் குடும்பத்தினர் ஒத்துணர்வுகூடக் குடிப்பிறந்தார் பக்கமே இருந்தது. தூத்தானகை பக்கமாக ஓரளவு ஒத்துணர்வு காட்டியது அவன் தந்தை மட்டுமே. “அத்தனை பேரும் உனக்கு எதிராயிருந்தாலும், நீ ஏன் கவலைப்பட வேண்டும்? நி கூறுகிறபடி ஃஇனேமோவா உன்னைக் காதலிப்பது உண்மை யானால், இத்தனை பேர் ஆதரவைக் காட்டிலும் அது விலையேறிய தாயிற்றே! ஆகவே, அதை மெய்ப்பிப்பதில் நீ கருத்துச் செலுத்து,” என்றார்.
மயோரியரிடையே தூத்தானகைக்கு இணைபிரியா
நண்பன்
ஒருவன் இருந்தான். அவன் பெயர் திகி. தூத்தானகையின் குழலிசைக்கு மயோரியர் இனத்திலேயே ஈடில்லாதிருந்தது. அது போல திகியின் கொம்பிசைக்கும் எங்கும் ஈடில்லை. நண்பர் இருவரும் மாறி மாறியும் இணையாகவும் கொம்பையும் குழலையும் ஊதினால், மோகோயாத்தீவு மட்டுமின்றி அதைச் சூழ்ந்துள்ள ரோட்டாருவா ஏரியும் அதன் ஓரத்துள்ள வெந்நீருற்றுகளும் கடந்து ரோட்டாருவா