அப்பாத்துரையம் - 36
294 || மாநிலமெங்கும் அவற்றின் மெல்லிசை எழுந்து தவழும். உறக்கத்திலும்கூட இவற்றின் மெல் அலைகளில் ஈடுபட்டுக் கலந்து எல்லா உயிரினங்களும் இன்பக்கனவுகளில் அயரும்.
விழாக்கழிந்து தூத்தானகையும் அவன் உடன் பிறந்தாரும் உறவினரும் ரோட்டாருவாவிலிருந்து புறப்பட்டு மொகோயாத் தீவை அடைந்தனர். அது முதல் அவன் அடிக்கடி இரவில் திகியுடன் இருந்து பாடுவான். பாட்டும் இசையும் ஏரி கடந்து, தென்றலில் மிதந்து ரோட்டாருவாவிலுள்ள ஃஇனேமோவாவின் துயிலைச் சென்று கலைக்கும்; சில சமயம் பாடலின் ஓசை அவளை அணுகிவரும்;அச்சமயம் அவள் மாளிகையிலிருந்து ஏரிக்கரைக்கு வருவாள்; இருவரும் நிலவில் ஏரிக்கரை மணலில் பேசியிருப்பர்; அல்லது படகில் ஏரிக்கரையோரம் சிறிது உலாவருவர்.ஃஇனேமோவா யாரிடமும் பாசங் கொண்டிருப்ப தாக எவரும் நினையாத வரை, இத்ததகைய போக்குவரவுகளும் நடமாட்டங்களும் எவருக்கும் தெரியாமலே இருந்தது.
இங்ஙனம் உலாவும் வேளைகளில்தான் ஒரு சமயம் தூத்தானகை ஃஇனேமோவாவிடம் தன் காதல் நிறைவாகிய திருமணம் பற்றிப் பேச்செடுத்தான்.
66
"கண்ணே! ஃஇனேமோவா! இம்மாதிரி நான் உன்னை வந்து காண்பதும், நாம் உலவுவதும் இன்பக் கனவுகளாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் கனவுகளில் எத்தனை காலம் நாம் கழிக்க முடியும். நீ என்னை மணந்து கொண்டால் நானும் உரிமையுடன் உன்னுடன் வாழமுடியும். நீயும் உரிமையுடன் என்னுடன் பழக முடியும். இதுவகையில் உன் மனமறிந்து நான் உன் தாய் தந்தையரை அணுகிக் கேட்கலாமென்றிருக்கிறேன்,” என்றான் அவன்.
அவள் அது பற்றிப் பேச நாணினாள். ஆயினும், பொறுப்பான காரியத்தில் வாய்திறக்காமலிருக்க வழியில்லை. "என் தாய்தந்தையரிடத்தில் கேட்பதில் பயன் இராது என்பது எனக்குத் தெரியும். அவர்கள்...’ என்று முடிக்காமல் நிறுத்தினான்.
""
அவள் என்ன சொல்லப் போகிறாளென்பது அவனுக்குத் தெரியும். அவன் இடைமறித்து, “அது எனக்கும் தெரியாம