பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

295

லில்லை. ஆனால், வேறு என்ன செய்வது? கேட்டுத்தான் பார்க்கலாமா என்று எண்ணினேன்," என்றான். அவள் மீட்டும் வாளா இருந்தாள்.

"நேரில் கேட்பதில் பயனில்லை என்றால் மயோரியர் வழக்கப்படி நமக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது," என்று மீண்டும் கூறினான்.

அவள் தயங்கவில்லை. “ஆம்! என்று கூறி அவனுக்கு அன்பு விடை தந்தாள்.

தூத்தானகை அண்ணன்மாரிடமும் தந்தையிடமும் தன் காதலைப் பற்றிக் கூறத் துணிந்தது இவ்வுறுதியின் பின்னரே யாகும்.

தூத்தானகை அண்ணன்மார், அவன் காதற் கதையை நம்ப மறுத்தார்கள். ஆனால், அதேசமயம் அவர்கள் அதைப் பற்றி ஃஇனேமோவாவின் உறவினருக்குப் பறை சாற்றவும் மறக்க வில்லை. அவன் கூறியதில் உண்மை இருந்தாலும் அதை ஒழித்துக் கட்டவும் அதன் பாதையில் முட்டுக்கட்டையிடவுமே அவர்கள் இதைச் செய்தார்கள்.

அவர்கள் முயற்சி பயனளித்தது. ஃஇனேமோவாவின் கன்னி விடுதலை யுரிமைமீது வலைகள் வீசப்பட்டன. அவள் போக்குவரவுகள் தடுக்கப்பட்டன. அவள் செயல்கள் மீது பல கடைக்கண்கள் வேவு பார்த்தன. அவளறியாமல் அவளைச் சுற்றிலும் மென் தடைக்கோட்டைகள் வளர்ந்தன. இவற்றை அவள் ஓரளவு கவனித்தாள். ஆனால், தடைகளின் அளவை அவளும் முற்றிலும் அறியவில்லை.

தூத்தானகை ஃஇனேமோவாவை உடன்போக்குக்கு அழைக்க வாய்ப்பான நாளுக்காகக் காத்திருந்தான். நிலாக்கால மாகப் பார்த்து நள்ளிரவில் பாடினான். நிலவொளியில் இசை அலைகள் பறந்தன. அவற்றை யாவரும் கேட்டனர். ஃஇனேமோவாவும் நள்ளிரவில் விழித்திருந்து கேட்டாள். ஆனால், முன்னெச்சரிக்கைகளின் பயனாக, அவள் உறவினரும் அதைக் கேட்டனர். அதன் பொருளை உணர்ந்தனர். அவர்கள் கட்டுக் காவல்கள் இறுகின. அவள் வெளியேற முடியவில்லை.