பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(296) ||

அப்பாத்துரையம் - 36

அன்று முதல் நாள்தோறும் நள்ளிரவில் தூத்தானகையின் குழலும் திகியின் கொம்பும் ஊதின. நாள்தோறும் நள்ளிரவில் இனேமோவா படுக்கையில் புரள்வாள். எழுந்து வாயிலைத் திறக்கவோ பலகணி வழியாக வெளியேற வழிபார்க்கவோ முயல்வாள்; ஆனால், தோழியர் ஏவலர்களின் கட்டுக்காவற் கோட்டை அவள்முன் தன் இடையீடில்லா வரிசைகளைக்காட்டி நிற்கும்.

நாட்களாயின; வாரங்களாயின; ஃஇனேமோவாவின் உள்ளம் தத்தளித்தது; தூத்தானகையின் நம்பிக்கை வரவரத் தளர்ந்தது; உடன் பிறந்தார்களின் கேலிகள் எல்லை கடந்து நீண்டன.

ஆனால், நாட்செல்லச்செல்லக் கட்டுக்காவல் தளர்ந்து விட்டதாகத் தோன்றிற்று. ஒருநாள் தோழியர் அயர்ந்து துயின்றனர். ஏவலாளர் கோட்டை ஒரு பக்கத்தில் தளர்வுற் றிருந்தது. தளர்ந்தாலும் அயராத உள்ளங்கொண்ட நங்கை ஃஇனேமோவா உடனே எழுந்தாள். காவலும் தோட்டமும் கடந்து ஏரிக்கரை சென்றாள்.

ஆயின், அந்தோ! தடைக்கோட்டையின் ஒரு கூறு அங்கே அவளைத் தடுத்தது. ஏரியிலுள்ள படகுகள் யாவும் அப்புறப் படுத்தப்பட்டிருந்தன. அவள் ரோட்டாருவாவில் திரியலாம். ஏரி கடந்து மோகோயத் தீவுக்குச் செல்ல முடியாது.

தூத்தானகையின் குழலிசை, திகியின் கொம்பிசை மாறி மாறி அலைகளில் மிதந்து வந்து கொண்டுதான் இருந்தது. காதலன் அழைக்கிறான். காத்திருக்கிறான். ஆனால் படகில்லாமல் ஏரியை எங்ஙனம் கடப்பது? அவள் சிந்தித்தாள். திடீரென அவள் உள்ளத்தில் ஓர் ஒளி தோன்றிற்று!

தண்ணீர் மொள்ளுதற்குரிய ஆறு பெரிய குடங்களை அவள் எடுத்துக் கொண்டாள். மும்மூன்றாக இருகழிகளில் அவற்றைக் கட்டினாள். அவற்றை மிதக்கும் புணையாகக் கொண்டு ஏரியை நீந்திக் கடக்கத் துணிந்தாள்.!

ஏரியின் ஒரு புறத்தில் ஆழ்தடம்வரை நீண்டு கிடந்தது, இனின்கப்புவா என்ற பாறை! அவள் அதன் வழியாகத் தன்