பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 5

[297

நீர்க்குடப் புணையுடன் சென்றாள். நீரருகே வந்ததும் அவள் தன் உள்ளாடை தவிர மீந்த ஆடைகளை அகற்றிக் கரையில் வைத்தாள். உள்ளாடையுடன் நீரில் இறங்கி இருகையாலும் நீரில் புணையை அமிழ்த்துக்கொண்டு, காலால் பாறைக்கு ஓர் உதை கொடுத்தாள். அந்த உதையின் வேகத்திலேயே சிறிது தொலை மிதந்தாள். பின் தன் கால்களில் வலு இருக்கு மட்டும் நீந்தினாள். காலயர்ந்தபின் தன் பளுவைப் புணைகள் மீது சாரவிட்டுச் சிறிது நேரம் நீரில் மிதந்து களையாறினாள். அதன்பின் மீண்டும் நீந்தத் தொடங்கினாள்.

ஏரி நடுவில் ஆங்காங்கே ஆழம் குறைந்த திடல்களில் மரங்கள் நின்றன. ஃஇனோவாத்தா அத்தகைய ஒரு படல் புன்னைமரம். அதில் அவள் புணையைத் தொங்கவிட்டுத் தங்கிச் சிறிது இளைப்பாறினாள்.

நடு ஏரிக்கு வரும்போது நீரின் குளிரால் அவள் நாடி நரம்புகள் விறைத்துப்போய்ச் செயலற்ற நிலை அடைந்தன. அத்துடன் கருக்கிருட்டுக் காலமானதால் திக்குத்திசை தெரிய வில்லை. ஆனால், தூத்தானகையின் குழலிசை, அவளுக்கு அவள் செல்லவேண்டும் திசையையும் அறிவித்தது. குளிரால் உறைந்து போன குருதிப் போக்கையும் மீண்டும் ஓரளவு கனிவித்து ஓடச் செய்தது. அவள் அவ்விசையின் திசையிலே நீந்தியும் மிதந்தும், மிதந்தும் நீந்தியும், அங்குலம் அங்குலமாக முன்னேறினாள்.

சில இடங்களில் காற்று அவள் விரும்பிய திசையிலடித்து அவளுக்கு உதவிற்று; ஏரியின் நீரோட்டங்கள் சில சமயம் அத்திசையில் அவளை மிதந்து செல்லவிட்டு உதவின; ஆனால், அவ்வப்போது அவற்றின் திசை அவள் விருப்பத்துக்கு மாறாக இருந்ததனால், அவள் நரம்பு நாடிகளின் ஊக்கம் ன்னும் இருமடங்காக வேண்டி வந்தது.

குளிர்நீரில் குளித்தறியாத நங்கை, நெடுநேரம் நீரிலேயே கிடந்தும், நீந்தியும், முற்றிலும் உணர்ச்சியிழந்தாள். கைகால்கள் முற்றிலும் மரத்துப் போய் அசைய மறுத்தன. அச்சமயம் ஒரு கைப்புற நீர் சற்று வெதுவெதுப்பாகவும், மறுபுறம் குளிர் மிகுதியாயும் இருப்பதை அவள் கவனித்தாள். ஏரியின் மறுகரை வந்துவிட்டது என்பதை இது அவளுக்குக் காட்டிற்று. மொகோயாத் தீவின் பெயர்போன வெந்நீரூற்றுகளில் சில ஏரிக்