பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(298)

II.

அப்பாத்துரையம் - 36

கரையிலேயே இருந்தன. ஏரிக்கும் அதற்கும் இடையே ஒரு மெல்லிய மண்கரையே வெதுவெதுப்பு மிகுந்தும் இருந்ததன் காரணம் இதுவே. ஃஇனேமோவா இவ்வுண்மையை அறிந்த வளாதலால் கரையோரமாக மெல்ல நகர்ந்து வந்து அதன் வெது வெதுப்பில் உடம்பின் குளிர் போக நின்றாள்.

காதலனை வந்தடையும் ஆர்வத்தில் அவள் நீந்தி வந்துவிட்டாள். ஆனால், புறப்படும்போது விரைவில் நீந்துவதை மட்டும் எண்ணி, உள்ளாடை தவிர மற்ற ஆடைகளைக் களைந் தெறிந்துவிட்டாள். டாள். இப்போது கரையேறும் சமயம்தான் அச்செயலால் ஏற்பட்ட இக்கட்டான நிலை அவள் நினைவுக்கு வந்தது. அருகே வந்து சேர்ந்தும் ஆடையில்லாமல் ஒரு பெண் எப்படிக் கரை மீதேறுவது? ஆடையில்லாத இந்த நிலைமை ஒருபுறம், குளிர் ஒரு புறம் வெதுவெதுப்பான நீரிலும் அவள் கரையை ஒட்டி நின்று விடும்படி செய்தன. இங்ஙனம் நின்று கொண்டு 'தூத்தானகையைக் காண இனி யாது செய்வது?” என்ற ஆழ்ந்தாராய்வில் அவள் முனைந்தாள்.

சமயமும் சூழலும் அவளுக்கு உதவின. அருகேயுள்ள வெந்நீரூற்றில் யாரோ நீர் மொள்ளும் அரவம் கேட்டது. அவள் தன் குரலை ஆண் குரலாக மாற்றிக் கொண்டு, நீரில் கழுத்தளவு ஆழத்திலிருந்துகொண்டே, ‘யாரது?' என்றாள்.

66

"நான்தான், தூத்தானகை ஆண்டையின் பணியாள்; அவருக்காக வெந்நீர் கொண்டு போகப்போகிறேன்,” என்றான் ஒருவன்.

"அப்படியா? அவர் என் நண்பர்தான். முதலில் ஒரு கலத்தை என்னிடம் கொடு. சிறிது வெந்நீர் அருந்திவிட்டுத் தருகிறேன்,” என்றாள் அவள்.

பணியாள் மூன்று கலங்கள் கொணர்ந்திருந்தான். ஒன்றை நீட்டினான். அவள் வாங்கித் தவறவிடுபவள் போலக் கீழே போட்டு உடைத்தாள். ஆனால் பணியாள் அதற்காகச் சினம் கொள்வதன் முன் அடா என் நண்பருக்கு நட்டம் விளைவித்து விட்டேனே! சரி, நாளை விலை கொடுத்து விடுகிறேன். மற்றொரு கலம் கொடு. வெந்நீர் குடித்துவிட்டுத் தருகிறேன் என்றாள். பணியாள் சற்றுத் தயங்கினான். ஆனால், தயங்கியபடியே