சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
299
ரண்டாம் கலம் தந்தான். இத்தடவை அவன் கையிலிருந்தே அதைத் தட்டிவிட்டு, என்ன அடம், என் கையில் தராமலே உடைத்து விட்டாயா? பார் உன் ஆண்டையிடம் வந்து... என்று கனல் தெறிக்கப் பேசினாள்.
பணியாள் உள்ளபடியே அஞ்சி விட்டான். மூன்றாவது கலத்தை நீட்டினான். ஃஇனேமோவா அதை வாங்கி அவன் காலடியிலேயே போட்டு உடைத்தாள்.
பணியாளுக்கு வந்த சீற்றத்திலே அவன் உடனே தூத்தானகையிடம் சென்று முறையிட்டான்.
என்று
தன் பணியாள் என்று தெரிந்தும், நண்பன் கூறிக்கொண்டு இக்கேடு செய்தவனைச் சந்து சந்தாகக் கிழிக்க வேண்டும் என்ற வேகத்துடன், தூத்தானகை ஏரிக்கரைக்கு விரைந்தான். அவன் கையில் நீண்ட கழி ஒன்று இருந்தது.
என் கலங்களை உடைத்த மடையன் யார்? என் கண்முன் வரட்டும். அவன் மண்டையை உடைக்கிறேன், என்று கரையருகில் வந்து அவன் கத்தினான்.
அவன் குரலை அவள் அறிந்தாள். கையில் கழியுடன் அவன் போர் வேடத்தில் போர்க்குரலுடன் தன்னை நாடிவந்தது கண்ட அவளுக்கு அந்நிலையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்த அடங்கிய சிரிப்பு அவன் சீற்றத்தை இன்னும் கிளறிற்று. அத்துடன் ஆள் நின்ற திசையையும் அது காட்டிற்று.
அவன் நீரில் இறங்கி அத்திசையில் விரைந்தான்.
அவள் பெண்மையின் குறும்பு அவனை இன்னும் விளையாட்டுப் பண்ணுவிக்க விரும்பிற்று. தன்னை அவள் எளிதில் கண்டுபிடிக்க அவள் விரும்பவில்லை. நாணமும் தானாக அவனிடம் அறிமுகம் செய்து கொள்வதைத் தடுத்தது. ஆகவே, அவள் அடிக்கடி நீரில் முழுகியும், கரை யோரமுள்ள பாறைகளில் பதுங்கி வளைந்தோடியும், ஓடியாடி விளையாட்டுக்காட்டினாள்.
தன் கலத்தை உடைத்ததுடன், தன்னுடன் இத்தகைய கேலி விளையாட்டு விளையாடும் குறும்பனைப் பிடித்து நல்ல பாடம் தர அவன் பின்னும் வேகமாக விரைந்தான்.