பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

(307

தன்னுடன் நட்பாடியவன் மகீமன்ஃசாரை மணக்க வந்த ளவரசன் மீர் அசாரே என்பதையும், அவனும் அவளைத் தேடியே அலைகிறான் என்பதையும் அக்தார் அறிந்து கொண்டான்.

ஆனால், மீர் அசாருக்கு ஆண்டி யார் என்று தெரியாது. இந்நிலையில் எப்படியாவது மீர் அசாரை ஏமாற்றிவிட்டுச் செல்ல அவன் சமயம் பார்த்திருந்தான்.

இளவரசன் உண்ட களைப்பால் அயர்ந்து உறங்கும் சமயத்தில், அக்தார் அவனைத் திடுமெனத் தாக்கி அவன் வாயில் துணியடைத்துக் கையையும் காலையும் கட்டி உருட்டினான்.

அதன்பின் அவன் இளவரசன் கையிலிருந்த பணத்தையும் அவன் உடைகளையும் குதிரையையும் கைக்கொண்டு, ளவரசன் உருவிலேயே குதிரை மீது விரைந்து சென்றான். ஆனால் மீட்டும் ஒரு தடவை, அவனொன்று நினைக்கத் தெய்வமொன்று செய்து காட்டிற்று.

இளவரசனுடைய ஆட்கள் அவனைக் கண்டு இளவரசன் என்று நினைத்து அணுகினார். அவன் ஓட முயன்றான். அவன் இளவரசன் அல்ல என்பதும், இளவரசனுக்குத் தீங்கு செய்து விட்டு அவ்வுருவில் ஓடுபவனே என்பதும் உடனே தெரிந்து விட்டது.

ளவரசனை மீட்டுக் கொண்டு, யாவரும் முதலமைச்சரிடம் சென்று அக்தார் செயல்பற்றி முறையிட்டனர்.

முதலமைச்சர் மூலம் இச்செய்தி அறிந்ததே, இளவரசி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இளவரசன் தன்னை மணக்க இருந்த காதலனே என்பதையும், அவனைத் தாக்கித் திருடமுயன்றவன் தன்னை அலெப்போவுக்குக் கடத்திக் கொண்டு வந்தவனே என்பதையும் அவள் ஒரு நொடியில் உய்த்துணர்ந்தாள்.

முறைப்படி மீர் அசாரையும் அக்தாரையும் உசாவியதில், முக்காற்பங்கு உண்மையும் யாவருக்கும் வெளியாயிற்று.

அக்தாரை அச்சுறுத்தி அவனைப் பற்றிய விவரம் முழுவதும் வெளியாக்கிய பின், இளவரசி தன் ஆணுடை