இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
308
அப்பாத்துரையம் - 36
கலைத்து தானே மகீமன்ஃசார் என்று காட்டிக் கொண்டாள். இளவரசன் மீர்அசார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
அந்நாட்டு முறைப்படி, நம்பத்தகாத பெருந்திருடன் என்ற குறிப்புந் தோன்ற நெற்றியில் அடையாளச் சூடப்பட்டு அக்தார் நாடு கடத்தப்பட்டான்.
மகிமன்ஃசாரின் தாய் தந்தையர் உறவினர் உறவினர் யாவரும், மீர் அசாரின் உறவினர் யாவரும் வரவழைக்கப் பட்டனர். மகீமன்ஃசார் பேரரச விருந்துகளுடன் மீர் அசாரை மணந்து கொண்டாள். மீர் அசார் அலைப்போ, உரூம், தஃப்ரீஃசு ஆகிய எல்லா அரசுகளுக்கும் உரிய பேரரசனானான். மக்மன்ஃசார் அவன் உரிமைப் பேரரசியானாள்.
மகீமன்ஃசாரின் நல்லறிவுடன் தன் நல்லறிவை இணைத்து
மீர் அசார் பேரரசாண்டான்.