பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அப்பாத்துரையம் - 36

பார்த்திருக்க முடியாது. துணிந்து இனி ஒரு காரியம் செய்யப் போகிறேன்; நீ இணங்க வேண்டும்,' என்றாள்.

வள்ளி, அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டு, “அக்கா! உன் உள்ளத்தை நான் நன்கு அறிவேன். உன் விருப்பப்படி நடப்பேன்,” என்றாள்.

"வள்ளி! உன் குழந்தையை - என் நீலனின் குழந்தையை என்னிடம் கொடு; அவன் முகத்தைப் பார்த்தாவது என் மாமன் மனம் கனியும்,” என்றாள்.

66

‘உன் நல்ல மனத்திற்காகவாவது இறைவன் இரங்கட்டும்,” என்று குழந்தையை வள்ளி நெல்லையிடம் ஒப்படைத்தாள்.

அறுவடைக் காலத்தில்

அஃது அறுவடைக்காலம். வேலன் வயல்கள் அவ்வாண்டு மேனி கொழித்தன. மலைமலையான வைக்கோற் போர் களிடையே குன்று குன்றாக நெல் குவிந்து கிடந்தது. அவற்றிடையே குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டு நேரத்தைப் போக்கினாள் நெல்லை அறுவடையின் செழிப்பினிடையே ஏழை நீலனின் துணையற்ற குழந்தையைக் கண்டால் அவன் மனம் இரங்கும் என்று, அவன் அப்பக்கமாக வருவதை நெல்லை எதிர் பார்த்திருந்தாள்.

அன்று முழுவதும் வேலன் அவ்விடம் வரவில்லை. களம் அடிப்பவர் கூலிக் கணக்கிலேயே ஈடுபட்டிருந்துவிட்டு, அவன் நேராக வீடு சென்று விட்டான்.

மறுநாளும்

நெல்லை

நெல்லை குழந்தையுடன் அங்கேயே காத்திருந்தாள். மாலையில் அவ்விடம் வந்த வேலன் அவளைப்பார்த்து, "இங்கே உனக்கென்ன வேலை? இஃது ஏது குழந்தை?” என்று கேட்டான்.

வேலன் சினம்

நிலத்தைப் பார்த்தவண்ணம் குழந்தையை அவனிடம் விட்டு அவள், “இது நீலனின் குழந்தை. இதற்கு இனி நீங்கள் தானே தந்தை. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,” என்றாள்.