பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. விளையும் பயிர் முளையிலே!

வீ. வில்லி விங்கி

இளமையில் அமைதியாயிருக்கும் பிள்ளைகளைவிட இளமையில் துடுக்குமிக்க பிள்ளகைளே பிற்காலத்தில் அறிவுக் கூர்மையும், திறமையும் உடையவர்களாய் விளங்குவர் என்று கூறுவதுண்டு.வீ. வில்லி விங்கியின் இளமைக்காலம் இதற்கு ஓர் அரிய எடுத்துக்காட்டு ஆகும்.

வீ.வில்லி விங்கிக்குத் தாய் தந்தையாரிட்ட முழுப் பெயர் பெர்ஸிவல் வில்லியம் வில்லியம்ஸ் என்பதாகும். கண் கண்டவர்கட்கெல்லாம் பட்டப்பெயர்கள் கொடுக்கும் அவன் இயல்பு. தன்னைக் கூடச் சும்மா விட்டு விடவில்லை. பழைய சிறுகதை ஒன்றில் அவன் பார்த்த ஒரு கவர்ச்சி மிக்க பெயரை அவன் தனக்குத்தானே சூட்டிக் கொண்டான். அவன் இட் பெயர் மற்ற எல்லோரின் வகையிலும் ஒட்டிக் கொள்வது போல், அவன் வகையிலும் ஒட்டிக் கொண்டது. வளர்ந்த பின் அதை அவன் உருட்டித்தள்ள எண்ணின போதும் அது

விட்டபாடில்லை.

முரட்டுக் குழந்தை

வில்லியின் தந்தை இந்திய வடமேற்கு எல்லைப்புறத்தில் உள்ள 195-ஆவது பட்டாளத்தின் தலைவரான கர்னல் வில்லியம்ஸின் ஒரே குழந்தை. பிறந்து இரண்டு திங்களாகு முன்பே அவன் பலனற்ற தன் ஈறுகளால் தாயைக் கடித்தும், செம்பட்டை முடிகள் கூடத் தோன்றாத தலையால் அவளை முட்டிக் குடைந்தும் தன் உள்ளார்ந்த “குரங்கு”த் தனத்தைக் காட்டினான்.