சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
21
வீரர்களுக்குக் கொடுக்கப்படும் நன்னடத்தைக் குறிப்புத் தரப்படும். அதைக் கண்டபின்தான் தின்பண்டங்களை நண்பரும், உறவினரும், உனக்குக் கொடுக்கலாம்,” என்று அவர் கண்டிப்பான ஏற்பாடு செய்தார்.
வீ வில்லி விங்கிக்குத் தின்பண்டத்தில் விருப்பம் தான். ஆதலால் நன்னடத்தைக் குறிப்பிலும் நாட்டம் ஏற்படவே செய்தது. ஆயினும் அவன், தன் இயற்கைக்கு மாறாக நடந்து அதனைப் பெறுவதுதான் அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது.
வில்லியின் ஒரே நண்பர்
வில்லிக்கு நண்பர்கள் மிகக் குறைவு. பட்டப் பெயர்கள் இடும் இயற்கையினால் எந்தப் புதிய மனிதரும் அவனை விரும்புவதில்லை. ஆனால், ஒரே ஒருவர் வகையில் அவன் பட்டப் பெயரால் பகைமையோ வெறுப்போ ஏற்படவில்லை. இம்மனிதர் கர்னல் வில்லியம்ஸின்கீழ் துணைத் தலைவராய் இருந்த பிராண்டிஸ் என்பவர். அவர் தலைமுடி செம்பட்டையாய் இருந்ததால், வில்லி அவரை அண்டி செம்பட்டு (Coppy) என்றழைத்தான். அவர் சினங்கொள்ளாமல் புன்முறுவலுடன் வில்லியின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். அன்று தொடங்கி இருவரும் நண்பர் ஆனார்கள்.
கூட
வில்லிக்குத் தந்தை தாய் ஆகியவரிடத்தில் கிடைக்காத நட்பும் உரிமையும் அவரிடத்தில் கிடைத்தன. அவர் தொப்பியை வைத்து அவன் விளையாடுவான். அவர் பெரிய மூக்குக் கண்ணாடியைத் தன் சிறு மூக்கில் வைத்துத் திரிவான். தந்தை, தாய் கண்டித்தாலும் கூடச் செம்பட்டு இதனைத் தடுப்பதில்லை. உண்மையில் (சற்று முன்னெச்சரிக்கையுடன்) தன் வாளைக் கூட வில்லி உருவிக் கொஞ்ச நேரம் கையில் வைத்திருக்கச் செம்பட்டு ணங்குவதுண்டு. இவ்வளவு விளையாட்டுகளிடையேயும் செம்பட்டிடம் மதிப்பு மட்டும் வில்லிக்குக் குறையவில்லை. தந்தைக்கு அடுத்தபடி அவரே மிகவும் பெருந்தன்மைமிக்க மனிதர் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.