பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(24) ||

பிராண்டிசின் விளக்கம்

அப்பாத்துரையம் - 36

பிராண்டிஸுக்கு உள்ளூர இருந்த கவலை தீர்ந்தது. அவன் வில்லி சிறுவனாயினும் நம்பிக்கையானவன் என்று கண்டு அவன் மனதுக்குப் புரியும் முறையில் செல்வி அலார்டைஸுடனுள்ள தன் உறவைச் சற்று விளக்கிக் கூறினார். ன்னும் சில நாட்களுக்குள் அவள் எனக்கு உரியவளாய் விடுவாள். அதன்பின் எத்தகைய மறைப்பும் வேண்டியிராது," என்றார்.

66

வில்லி இதனையறிந்து கொண்டதாகத் தலையை ஆட்டினான். ஆனால் அவன் தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் மலர்ந்த அவன் அறிவு செம்பட்டு அவளை மனைவியாகக் கொள்ளப் போகிறார் என்பதை உய்த்தறியக் கூடவில்லை. வாள், குதிரை முதலிய உடைமைகளைப் போலவே சொல்லி அலார்டைஸையும் அவர் வாங்கப் போகிறார் போலும்! என்று மட்டும்தான் அவன் எண்ணிக் கொண்டான்.

66

சிறைத் தண்டனை

தம் செம்பட்டின் வாள், குதிரை ஆகியவற்றில் கொண்ட பற்றுதல், அவனுக்குச் செல்வி அலார்டைஸிடமும் ஏற்பட்டது. ஓரிரண்டு வாரம் தொடர்ச்சியாக அடங்காக் குறும்புகள் செய்ததனால், வில்லிக்கு அவன் நன்னடத்தைக் குறிப்பு அகற்றப்பட்டதுடன், உணவின்றி ஒருநாள் முழுவதும் மாடியிலேயே சிறையிருக்க வேண்டும் என்று தண்டனையும் கொடுக்கப் பட்டது.

நல்ல பிள்ளையாய் இருந்து தண்டனையைப் பொறுமையுடன் கழித்தால்தான் நன்னடத்தைக் குறிப்பு மீண்டும் தரப்படும் என்றும் அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தன்

இயல்புகளையெல்லாம் அடக்கிக் கொண்டு வருத்தத்துடன் வில்லி மாடியிலிருந்து கொண்டு பால்கணி வழியாகத் தற்போக்காகச் செல்லும் மக்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் செல்வி அலார்டைஸ் குதிரையேறிச் சென்றதைக்கண்டு, "அல்லி அல்லி! எங்கே செல்கிறாய்?” என்றான்.