பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

31

அவனைக் கண்டுகொள்ளவும் செய்தனர். அச்சமயம் மல்லர்கோவின் துணைவர் யாரும் அவன் பக்கத்திலில்லை. அவர்களை அழைக்க ஊதுகுழலும் அவனிடம் அப்போது இல்லாதிருந்தது. ஆகவே அவன் சட்டென்று ஓடி அண்டை யிலிருந்த ஒரு நரைமூதாட்டியின் வீட்டில் அடைக்கலம் புகுந்தான். அவள் அவனிடம் பற்றுடையவளாதலால் தன் உடையை அவனுக்குக் கொடுத்தாள். அவள் உருவில் அவன் அவர்களை வரவேற்று ஊசிப் போன கருகிய அப்பத்தையும் நீர் பெருக்கிய பழ மோரையும் அவர்களுக்களித்தான். அதனால் நோயுற்று அவர்கள் நாட்டிற்குத் திரும்பினர். திரும்பும் போது மல்லர்கோவின் கணை, ஒன்று அவர்களை நோக்கிப் பாய அவர்களும் எதிர்த்தனர்.

போரும் வெற்றியும்

மல்லர்கோவின் ஆட்களும் வந்து கலக்கவே கடுஞ்சண்டை நிகழ்ந்தது. அதில் விசயப் பெருந்தகை காயமுற்றான். இளவரசனும் அவன் ஆட்களும் தப்பினோம் பிழைத்தோம் என்று நாட்டை நோக்கி ஓடினர்.

இதற்கிடையில் ஒருநாள் அவர்கள் இருக்குமிடத்துக்குப் புதியதோர் வீரன் வந்தான். அவனை மல்லர்கோவும் அவன் வீரரும் விருந்தினனாய் ஏற்று நல்வரவளித்தனர். ஆனால், அவர்கள் வழக்கப்படி மதங்க அடிகள் அவனைச் சிலம்பப் போருக்கு அழைத்தார். சிலம்பத்தில் புதிய வீரன் சற்றுப் பின் வாங்கினான். அதன்பின் குத்துச் சண்டை செய்தனர். அதில் மதங்க அடிகளை மட்டுமின்றிப் பிற வீரரையும் மல்லர்கோவையும் கூடப் பின்னடையும் படி செய்தான்.

மடத் தலைவன் திமிர்

தம்மையெல்லாம் வென்ற இப்புதிய வீரன் யாரோ என அவர்கள் திகிலடைந்திருக்கும் சமயம் மடத்தலைவன் வழக்கறிஞர் ஒருவனுடன் அங்கே வந்து சேர்ந்தான். விசயப் பெருந்தகை காயமுற்றிருப்பதால் தானே பணம் தந்து பத்திரத்தை மீட்டுக் கொள்வதாகக் கூறி மல்லர்கோ தான் கொள்ளையிட்டு வைத்திருந்த பணத்தில் இரண்டாயிரம்