பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

33

மாதவசேனனை மீட்கப் பொன்னுடன் சென்ற வீரன் அச்சமயம் பொன்னுடன் திரும்பவந்து, “ஐய! மாதவசேனனைக் காணவே முடியவில்லை. அவன் பகைவர் கைப்பட்டிருக்க வேண்டும். இதோ அவனை மீட்கக் கொண்டு போனபொருள்,” என்று பொன்னை விசயனிடம் கொடுத்தான்.

"புதல்வன் போனபின் பொன் எதற்கு,” என்று விசயன் வெறுப்புடன் அதனை வீசி எறிந்தான். அப்போது அரிகேசரி, “ஐயா! புதல்வன் என்றால் பொன் பெரிதன்று. ஆனால் புதல்வி என்றால் பொன்தான் பெரிது போலும்," என்றான். விசயப் பெருந்தகை வெட்கிப் புதல்வியை ஆகவமல்லனாகிய மல்லர்கோவுக்கே மணஞ்செய்விக்க இணங்கினான்.

நளினியின் திருமணம்

ஆயினும், மல்லர்கோ பின்னரும் மல்லர்கோவாகவே இருந்து விடவில்லை. அவன் தன் நிலவுரிமையினை மீண்டும் பெற்றுத் தன் வீரருடன் நாடு திரும்பி முன்னிலையிலேயே நளினியை மணந்து கொண்டான்.

அரசன்

நளினியும் மல்லர்கோவும் நெடுநாள் நலமாக வாழ்ந்தனர்.