பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

35

பிரித்தானியரால் இன்றும் வாய்மொழியாகவும், நூல் வழியாகவும், தெருப்பாட்டகவும், காப்பியமாகவும் புகழப்பட்டு வருகின்றன. அவ்வீரருள் ஒருவன் லான்வால் பெருந்தகை ஆவான்.

லான்வாலும் கினிவீயரும்

லான்வால் பெருந்தகை வெளிநாட்டிலிருந்து வந்தவன். ஆகவே, மற்ற வீரர்கள் முதலில் அவனுடன் நெருங்கிப் பழகவில்லை. ஆனால் விரைவில் அவன் நற்குண நற்செய்கை களும், சலியாத ஈகையும் அவனை அனைவருக்கும்

நண்பனாக்கின.

ஓர் உயிர் மட்டும் அவனுடன் என்றும் தீராப் பகைமை கொண்டிருந்தது. அந்த உயிர்தான் அரசன் புதிதாக மணந்த அரசி கினிவீயர். அவள் பார்வைக்கு உயர் ஒழுக்கம் உடையவளாகக் காணப் பட்டாள். ஆனால் உள்ளூறக் கபடும், வஞ்சகமும் சூதும் நிறைந்தவள். ஆர்தரை மணக்குமுன், அவள் லான்வாலை விரும்பி நாடி இருந்தாள். லான் வால் அவளை அசட்டை செய்யவே மனம் புண்பட்டு எவ்வகையிலாயினும் பழி தீர்ப்பதென வாய்ப்பை நோக்கிக் காத்திருந்தாள்.

ஆர்தர் அவளை மணந்ததும், ஆர்தர் வீரருள் அவன் ஒருவனாய்ச் சேர்ந்ததும் அவளுக்குத் தக்க வாய்ப்பாயின. அவள் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எதிராக ஆர்தரின் மனத்தைத் தூண்டிக் கலைக்கலானாள். ஆகவே ஆர்தர் நடத்திய ஒவ்வொரு போரிலும் அவன் வெற்றி பெறப் பொருதானா யினும் வெற்றிக்குப் பின் வழங்கப்படும் பரிசுகளுள் எதுவும் அவனுக்கு மட்டும் வழங்கப் பெறுவதில்லை. இதனால் வரவர அவன் பொருள் நிலை குறைந்து அவன் ஆடையணிகளுக்கும் உணவுக்கும்கூட வழியின்றித் திண்டாடினான்.

லான்வால் துன்புறல்

அவன் குதிரை, உணவின்றி எலும்புந் தோலுமாயிற்று. அவனும் ளைத்துப் போனான். அவன் அணிந்திருந்த இருப்புக் கவசத்தில் உடைந்த தலையணி ஒக்கிடப் பெறவில்லை. தேய்ந்த காலணி மாற்றப் பெறவில்லை. இந்நிலையில்